செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

வெல்க அவர் ஒளித்திரைகள்.

 வாழை "ட்ரெய்லர்)

_________________________________________


இந்த‌ நிகழ்ச்சியின்

விண்ணொளியில்

இயக்குநர் பா ரஞ்சித்

கொட்டி கொட்டி குமுறியிருக்கிற‌

அல்லது

குமுறி குமுறி கொட்டியிருக்கிற‌

உண்மைகள்

உண்மையிலேயே 

உண்மைகள் தான்.

சமுதாய முரன்பாடுகள்

சினிமாவின் ஸ்க்ரிப்ட்டுக்குள்ளோ

க்ளாப்ஸ்டிக்குள்ளோ

அடங்காது

என்பது மிக மிக 

கசப்பான உண்மை தான்.

அவர் கேட்ட கேள்வியின் சூடு

உண்மையிலேயே

ஆயிரம் எரிமலைகளுக்கு

சமம்.

ஏண்டா ஓங்கிட்ட கேட்டுக்கிட்டு தான்

இப்படி இப்படி

எங்கள் வலிகளை 

போக்கிக்கொள்ள வேண்டுமா?

உங்களுக்கு வலிக்காமல் தான்

எங்கள் வலி தீரணுமா?

இப்படித் தான்

அவர் கொதிக்கிறார்.

நம் சிந்தனைகளுக்கு

இத்தகைய கொதிகலன்கள் தான் தேவை

என்பதில் 

எந்த தடைக்கற்களும் ஏற்படுத்தக்கூடாது

என்பது மிக மிகச்சரியானது தான்.

இந்த பாய்ச்சல் புலத்தில்

விழும் 

இடுக்குகளும் கீறல்களும் பிளவுகளும்

தான்

பெரிய ஆபத்துகள்.

இதைக்கடந்து 

சிகரம் ஏறி கொடி ஏற்றும் வல்லமை

பா ரஞ்சித் அவர்களுக்கு

நிச்சயம் உண்டு என‌

நம்புகின்றேன்.

வாழ்க அவ்ர் முத்திரைகள்.

வெல்க அவர் ஒளித்திரைகள்.

______________________________________________

சொற்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக