"காக்கைச் சிறகுகள்"
______________________________________
நான் போய் படுத்து
புரண்டு கொள்ளத்தொடங்கினேன்.
என்னவோ..போ!
கவிதையும் ஆச்சு நீயும் ஆச்சு.
கணினி விசைப்பலகையை
ஆ வென்று கொட்டாவி பிளந்தாற்போல்
மேசை மேல் கடாசிவிடாத
குறையாய்
விட்டெறிந்து விட்டு....
படுக்கையில் கிடந்தேன்.
தூக்கமே வராத ஒரு தீயில்
பொசுங்கிக்கொண்டிருந்தேன்.
மறுநாள் காலை.
சன்னல் கம்பிகளில்
சூரியன்
காறி உமிழ்ந்து கொண்டிருந்தான்.
வழக்கத்துக்கு மாறாக
வெளியே காக்கைகளின் இரைச்சல்.
தாங்க முடியவில்லை..
தூரத்து மின் கம்பியில் சிக்கி
ஒரு காக்கை தலை கீழாக
தொங்கிக்கொண்டிருந்தது.
காக்கைகளின் கண்ணீர் அஞ்சலிகள்
அந்த கூச்சல்கள் முழுதும்...
மேசையில் பார்த்தேன்.
"காக்கைச் சிறகுகள்"
என்று
தலைப்பு மட்டுமே
அந்த வாய் பிளந்த
கணிப்பொறித்திரையில்
விரல் தட்டி எழுதப்பட்டிருந்தது.
அங்கே தொங்கிக்கொண்டிருப்பது தான்
என் கவிதையா?
_________________________________________
எப்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக