ஈரோ!டு தமிழன்பன் அவர்களே!
திருப்பரங்குன்றம் அறிவேன்.
அங்கு சென்றிருக்கிருக்கிறேன்.
தமிழ் என்றால்
முருகு என்ற அழகு.
தமிழ் என்றால்
அறிவு என்ற அழகு.
இப்போது
சொற்பெருங்குன்றம்
என்று தினம் தினம்
படியேறி படியிறங்கி
படி படி என்று
தமிழ்ச்சொற்களுக்குள்
படிந்து கிடக்கின்றேன்.
அன்பின் பெருந்தகை
ஈரோடு தமிழன்பன் அவர்களே
கவிதைகளின்
"சொற்பெருங்குன்றமே!"
திருக்குறளை
எழுசீர்களுக்குள்
எல்லோரும் அறிவோம்.
அது
யாருக்கும் எட்டாததாக
இருக்கக்கூடாது
என்றும்
தமிழா நீ
இன்னும் எட்டு எடுத்து வைக்கவேண்டிய
அந்த
எட்டாயிரம் கோடி கோடி
யுகங்களுக்குள்
எப்போது எட்டு எடுத்து வைக்கப்போகிறாய்
என்ற ஏக்கத்தை
ஒரு குறுங்கவிதையில்
எழுதினாயே!
எண்சீர்கள் எல்லாம் திருக்குறளின்
எழுசீர்களுக்குள்
போய் அடைந்து கொள்ளவேண்டும் என்று
உண்ணாவிரதம் இருந்ததாமே!
அது போல் எங்களுக்குள்ளும்
ஒரு ஏக்கம் உண்டு.
இதொ
அருகில் வந்து கொண்டிருக்கிற
உன் நூற்றாண்டு விழாவுக்கு
நாங்கள் எட்டு எடுத்து
வைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆம்
அதுவும் நீளட்டுமே
எட்டாயிரம் கோடி யுகங்களாக.
சொற்களின் இமயமே
உன் உயரத்தை
அளந்து பார்க்க சென்ற
அந்த எட்மண்ட் ஹில்லாரி
இப்போது
இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியிடம்
போய்க்கேட்டுக்கொண்டார்கள்.
நம் தமிழின் உன் தமிழின்
அந்த உயரத்தை
ஒலியாண்டுகளிலேயே
கணக்கிட்டுக்கொள்ளட்டும் என்று.
தமிழ்ச்சுடர் சான்றோனே!
நீ நீடுழி வாழ்க!
காலம் காணாமலே போகட்டும்.
அதை வைத்து
வயதுகளின் கொட்டாங்கச்சியில்
உன்னை வைத்து கொண்டாட
விருப்பமில்லை.
அதனால் தான் வாழ்த்துகிறோம்
நீ நீடூழி நீடூழி....நீடூழி
வாழ்க என்று!
அன்புடன்
சொற்கீரன்.
16.08.2024.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக