ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

தேவை ஒரு "அவசரநிலைப்பிரகடனம்"

 

தேவை ஒரு "அவசர்நிலைப்பிரகடனம்"

___________________________________________

எப்சி




நிரம்பி வழிகிறது.

எங்கும் 

எதிலும்.

தூசி கிளம்பினாலும்

புழுதி படிந்தாலும்

ரோடெல்லாம் அது தான்.

வானத்தில்

நட்சத்திரங்கள் இடமின்றி

உதிர்ந்து போகும்படி

நிரம்பி வழிகிறது.

அட!

என்னிடத்திலுமா நீ

என்று

சூரியனே 

தலையில் அடித்துக்கொள்கிறது.

கிண்ணத்திலும் அது.

எண்ணத்திலும் அது.

அவர் எழுதிய்தும் இது.

"பெண்ணொன்று ஆணொன்று

செய்தான்...அவர் 

பேச்சிலும் மூச்சிலும்"..

இது தான் நிரம்பி வழிகிறது.

சுண்டல் மடித்துக்கொடுக்கும்

காகிதத்திலும்

இது.

குட்டைப்பென்சில்

கிறுக்கியதிலும் இது.

பஸ்டிக்கட்டில் கிடைக்கும்

இண்டு இடிக்கிலும் இது.

பச்சைக்குத்திப்பார்த்துக்கொண்டு

பேசிக்கொள்வதிலும் இது.

அலை வந்து 

எழுதி எழுதி அழித்துப்போனாலும்

இது..

நிரம்பித்தான் வழிகிறது.

இதுவே ஒரு

குப்பைக்கூடையோ

என்று நாம் மிரண்டு கிடக்கும்போது

நிரம்பி வழியும் இந்த‌

குப்பைக்கூடைக்கு எந்த‌

குப்பைக்கூடையை நாம் தேடுவது.

நிரம்பி வழிந்து கொண்டே

இருக்கிறது.

அந்த ஏ ஐ ஆப்பிடம்

க்ளிக்கினேன்.

நிறுத்தவா?

ஏன்?

எதற்கு?

என்று

எழுத்து எழுத்தாய்

சொல் சொல்லாய்

செதில் செதிலய்

வரி வரி யாய்

பில்லியன் பில்லியன் 

ஒளியாண்டுகள் தூரத்துக்கு

டேட்டா கோடுகள் 

வெக்டார் கோடுகள்..

ஃபூரியர் ட்ரான்ஸ்ஃபார்மில்...

நிரம்பி வழிகிறது...

இன்னும் இன்னும்..

சமூக ஓர்மையை மழுங்கடிக்கும் 

உள்ளத்து ஓசைகளின் 

வெறி இரைச்சல்கள்

உயிரின் வேர்முடிச்சுகள் வரை 

முட்டி நின்றதால்

மனிதம் என்பதும் மக்கிப்போனதுவோ?

டிஜிடல் ஆரவாரங்கள்

நியூரான்களின் சினாப்டிக்

ஜங்ஷன்களில்

நிரம்பி வழிகிறது....

கவிதைகள்.


______________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக