ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

பிம்பம்

 

பிம்பம்

__________________________________

எப்சி


நான் இருக்கிறேனா?

இல்லையா?

கிள்ளிப்பார்த்துக் கொள்ளலாமா?

ஒலி எழுப்பி 

உறுதி செய்து கொள்ளலாமா?

ஒன்று செய்யலாம்.

நிலைக்கண்ணாடியில் 

போய்ப்பார்க்கலாமா?

தலை தொங்கிக்கிடந்தால்

இல்லை ஆகி விடுகிறேன்.

இன்னும் விறைப்பாக நின்றால்

இருக்கிறேன் என்பது உறுதி.

சரி.

கண்ணாடி எதிரே இருக்கிறது.

அது கலீர் என்று சிரிக்கிறது.

கண்ணடிக்கிறது.

முகம் துடைக்கிறது.

ஆனால் நான் எதுவும் செய்யவில்லையே.

கண்ணாடியில் உருவம் கூட தெரியாமல்

இருட்டாக அல்லவா தெரிகிறது.

நான் இல்லாமல் என் பிம்பமா?

நான் எங்கோ எத்தனையோ 

பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு

வீசப்பட்டு எறியப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஆனால்

பிம்பமாக நான்

அரக்கத்தனமாய் சிரிக்கிறேன்.

ஏதோ ஆயிரம் மடங்கு டைனொசார்

வடிவத்தில்

நாட்டியம் கூட ஆடுகின்றேன்.

"அட..சும்மா கெட!

நாங்கள் இன்னும் உனக்கு

முழுதாய் அல்காரிதம் செய்யவில்லை.

நீ தானே

குவாண்டம் கம்பியூட்டிங்கில் 

ஏ ஐ ஆப்பில் 

உன் டி என் ஏ..ஆர் என் ஏ

சிப் செருகினாய்.

குவாண்டம் டெலிபோர்டேஷன்

நடந்து கொண்டு இருக்கிறது.

இப்போதைக்கு உனக்கு

"இறப்பு" மோடு தான்.

"பிறப்பு" மோடுக்கு வர‌

இன்னும் சில பில்லியன் 

ஒளியாண்டுகள் போக வேண்டும்.

.....

ஏண்டா அப்போதே சொன்னேனே

கேட்டியா?

"கூடு விட்டு கூடு" பாயற

அட்டமா சித்தியையெல்லாம்

உன் கம்பிட்டர் பொட்டிக்குள்ள‌

திணிக்காதேன்னு சொன்னேனே.

இப்ப பாரு.

என்று விறைத்துக்கிடந்த அவனை

அவள் பாட்டி 

அந்த படுக்கையில் போட்டாள்.

அந்த பிம்பம் அது பாட்டுக்கு 

ரஞ்சிதமே ரஞ்சிதமே என்று

ஆடிக்கொண்டிருக்கிறது.

அது சரி..

அந்த பாட்டிக்கு கால் இருக்காண்ணு

கவனிச்சீங்களா?


______________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக