முதலில் இந்த கணக்கைத்
தீர்த்துக்கொள்வோம்.
ஒரு புள்ளியை நான் சிந்தினேன்.
நாங்கள் உணர்ச்சித்தீ மூட்டி
சமைத்து விட்டோம்.
அவள் இருட்டறைக்குள்
இந்த ஒளிக்குழம்பு
சுற்றி சுற்றி தட்டாமாலை
இட்டது.
ஒரு நாள் அந்த சூரியப்பிஞ்சு
எங்கள் தொட்டிக்குள்
முளை விட்டது.
அது நீயா?
நாங்களா?
அடர்ந்த ஆலமாய்
மேலும் மேலும்
விழுதுகளின் தூண்கள் எழுப்பி
இந்த மண்டபம்
கட்டி வைத்திருக்கிறோம்.
எப்போது வேண்டுமானாலும்
உன் கடப்பாரைகள் வந்து
இடித்துக்கொள்ளட்டும்.
ஆனால்
அது நீயா?
நாங்களா?
அந்த பெரிய மரத்தின்
அதை விட பெரிய நிழலாய்
இந்த கேள்வி விழுந்து கிடக்கிறது
மரம் உதிர்ந்து உலர்ந்து
மறைந்து போன பின்னும்.
______________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக