திங்கள், 19 ஆகஸ்ட், 2024

கலைஞர் எனும் காலப்பெட்டகமே!

    கலைஞர் எனும் காலப்பெட்டகமே

_____________________________________
உன் தமிழ் திறந்து
தமிழின் காலம் சொன்னாய்.
வரல் ஆறு கொண்ட‌
தமிழ்ச்சொற்களின்
வெள்ளம் தந்தாய்.
அகம் புறம் என
தமிழ் அள்ளித்தந்ததை
நீ நுள்ளித்தந்ததே
எங்கள் இமை மயிர்களின்
இழையை எல்லாம்
சூரியத்தூரிகை
ஆக்கித்தந்தது.
உன் தமிழ் ஓவியம்
உலகத்தமிழ்க் கல்வெட்டு ஆனது.
நூற்றாண்டுகள்
பின்னோக்கிக்கிடக்கட்டும்
உன் யுகங்கள் தான்
முன்னோக்கி எப்போதும்
ஓடிக்கொண்டிருக்கின்றன!
கலி எனும் தமிழ்ச்சொல்லில்
நார் உரித்து
கலி யுகங்கள் என்றார்.
தமிழின்
கலி பிறந்ததில்
அவர்களுக்கு கிலி பிறந்தது.
மனிதம் எனும்
ஒளி பிறந்ததே
நம் தமிழ் என்று
விழி காட்டினாய்!
வீழோம் தலைவ!
கலஞர் என்ற
சொல் இங்கு உண்டு.
பேனாவை முறிப்பேன்
என‌
ஒரு கயவன் சொன்னான்.
கரையிலா நிற்கிறது
உன் பேனா?
ஊழிக்கடல் அல்லவா
அதோ
உறுமி நிற்கிறது.
தமிழ் வாழ்க!
தமிழன் வாழ்க!
எதற்கு நான்
கலைஞர் வாழ்க என‌
தனியாகச்சொல்லவேண்டும்.
அதற்குத்தான் சொல்கிறோம்
தமிழ் வாழ்க‌
தமிழன் வாழ்க.
அர்த்தம் புரியவில்லை
என்றால்
அந்த கயவனும் கேட்கட்டும்.
கலைஞர் வாழ்க!
கலைஞர்
வாழ்க வாழ்கவே!
_________________________________________
சொற்கீரன்.
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக