என்னவென்று சொல்லலாம்?
_________________________________________
சொற்கீரன்.
காதலை
காதல் என்று சொல்லாமல்
என்ன என்னவென்று சொல்லலாம்?
ஏதாவது சொல்
ஆனால் அது உனக்கு வெண்டும்?
ஒரு நினைவு வேன்டும்.
அதை அசைபோட்டுக்கொண்டே
இருக்கவேண்டும்.
ஒரு உணர்வு வேண்டும்.
அதை
தின்று கொண்டே இருக்கவேன்டும்.
ஒரு கனவு வேண்டும்.
அதற்காக
பஞ்செல்லாம்
பறந்து போகிற மாதிரி
தூக்கத்துக்காக
தலையணையை பிசைந்து கொண்டே
இருக்க வேண்டும்.
ஒரு குருட்டு நம்பிக்கை வேண்டும்.
அதை மேலும் இருட்டாய் இருக்கிற
நம் நம்பிக்கை கொண்டு
தடவிக்கொண்டே இருக்கவேண்டும்.
நீள நீளத்துக்கு எழுதிக்கொண்டே
இருக்கிற
ஒரு கணித சமன்பாடு வேண்டும்.
அதன் தலையைக்கொண்டு
அதன் வாலைக்கவ்விக்கொள்ளும்
தீர்வு கிடைக்கும் வரை
கட்டு கட்டாய் காகிதங்களில்
தேற்றங்கள் எழுதிக்கொண்டிருக்க வேண்டும்.
அறிவு எனும் ஒரு மாய
"வெப்"எனும் தொலைநோக்கி வேண்டும்
அதன் வழியே
அந்த "அறியாமை"யின்
மிச்ச சொச்சத்தை
சுரண்டிப்பார்த்து விட வேண்டும்.
அந்த மயிறகு வேண்டும்.
பட்டாம்பூச்சிகள் வேண்டும்.
மின்னல் இழைகளை
குதப்பி உமிழ வேண்டும்.
முத்தம் வேண்டும்.
வானத்திலிருந்து ஒரு
சத்தம் வேண்டும்.
போதும்..போதும்..
ரொம்பவே நொத்தித்து
நுரைத்து விட்டது.
சரி தான்...
உடைத்துச் சொல்லுங்களடா..
ஆணுக்கு பெண் வேண்டும்
பெண்ணுக்கு ஆண் வேண்டும்..
ஈடன் தோட்டத்து
வக்கிரத்துள்
ஒரு உக்கிரமமான
வெளிச்சம்
உத்தமமாய்
கூச்சல் போடுகிறது.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக