பால்வெளியில் ஒரு உதைபந்து விளையாட்டு!
___________________________________________________________________
பால்வெளிமண்டலம் என்பது அதை விட்டு வெளியே சுழற்றி அடிக்கும் கொடுக்கு போன்ற சுழல் கைகள்
(ஸ்பைரல் ஆர்ம்ஸ்) உடைய மிக மிக....மிக பிரம்மாண்ட ஒளிமண்டலம் எனும் கேலக்ஸி ஆகும்.அந்த கை வீச்சின் வேகம் என்ன தெரியுமா? மணிக்கு பத்துலட்சம் கி.மீ ஆகும்.அதுவும் கிட்டத்தட்ட நம் கோளங்களையேல்லாம் விட ஒரு பெரிய விண்மீன் ஆகும்.அத்தகைய "மா"நிறை (மெகா மெகா..மாஸ்) கூட
பால்வெளியின் கொடுக்கினால் அப்படி வீசப்படுகிறது என்றால் நம் பால் வெளி மண்டலம் எவ்வளவு பிரம்மாண்டம் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்.இதை இப்படி விஞ்ஞானமாய் பார்க்காமல் இன்னும் பாற்கடல் ..அமுதம்..நஞ்சு..தேவர்கள்..அரக்கர்கள்...மொகினி என்று அந்த அம்புலிமாமாக்கதைக்கு
பால்குடம் சுமந்து கொண்டிருக்கிறோம்.அதையும் விட கேவலம் என்னவென்றால் இப்படி எழுதிய நம் கதையைத்திருடித்தான் அவர்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று பேசுவது தான்.
__________________________________________________________________________
சொற்கீரன்
Mysterious Object Travelling At 1 Million Miles Per Hour Zooming Out Of Milky Way: NASA (msn.com)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக