அன்டோனி ஸீ புத்தகம்
___________________________
(QUANTUM FIELD THEORY...IN A NUTSHELL)
(by ANTONY ZEE)
குவாண்டம் இயற்பியல்
மனித அறிவியலின்
ஒரு ஒளிபடர்ந்த அழகிய
மண்டைக்காடு.
எனக்கு அதன் அடர்ந்த நிழலில்
எப்போதும்
குடியிருக்க ஆசை.
ஸீயின் வரிகள்
அறிவு ததும்பும் பளிங்குத்தடாகம்.
அதன் கண்ணாடிச்சொற்றொடர்களில்
எப்போதும்
மூளையின் சிலிர்ப்புகள்
சித்திரம் தீட்டப்பட்டுக்கொண்டே
சிந்தனைத்தெறிப்புகளாய்
பொறி சிதறிக்கொண்டே இருக்கும்.
குவாண்டம் என்பதன்
(நான் அதை தமிழில்
"அளபடை" என்று
செல்லமாகத்தான்
கொஞ்சிக்கொண்டிருப்பேன்)
சொல்லை
அவர் செதில் செதிலாய்
சிதிலமாக்குவார்.
அந்தக்கோட்பாட்டின்
கணித விரிவாக்கங்களை
அழகியல் முறுவலுடன்
எடுத்து எடுத்து காட்டிக்கொண்டே
வசீகரப்படுத்திக்கொண்டிருப்பார்.
எனக்குத் தோன்றிய
ஏதாவது ஒரு பக்கத்துள் புகுந்து
அவர் மூச்சின் பேச்சை
உற்று நோக்குவது
மிக மிகப்பிடிக்கும்.
இன்று பக்கம் 391ல்
"க்ராண்ட் யுனிஃபிகேஷன்"ல்
ஒரு கறி விருந்து சாப்பிட ஆசை.
இலை போட்டாச்சு.
வாருங்கள் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக