தமிழென்று பேர்!
_______________________________
தமிழுக்கு எதுவென்று பேர்?
எப்படிச்சொன்னாலும்
தமிழுக்கு
தமிழென்று தான் பேர்.
ஆனாலும்
அன்றாடம் இங்கே
பிறப்புக்கும் மந்திரம்.
பெயர்ச் சூடவும் மந்திரம்.
பூப்புக்கும் மந்திரம்.
புது வீட்டுக்கும் மந்திரம்.
ஏர் பிடிக்க மந்திரம்.
எருமை வாங்க மந்திரம்.
கிணறு வெட்ட மந்திரம்.
பூதம் வந்தாலும் மந்திரம்.
புல் தடுக்கி புல் தடுக்கி
விழுந்தாலும் மந்திரம்.
தர்ப்பைப்
புல் தடுக்கி புல் தடுக்கி
விழுந்தாலும் மந்திரம்.
இறப்புக்கும் மந்திரம்.
இறந்த பின்னே ஆவியென்னும்
பொய்களுக்கும் மந்திரம்.
அறியாமை ஆழ் குழிக்குள்
அமிழ்ந்து கிடக்க மந்திரம்.
ஆ! நாம்
விழுந்தா கிடக்கின்றோம்
என்று நீ
அலறிப்புடைத்து
என்று நீ
என் தமிழே!
என்று குரல் கொடுப்பாயோ
அதற்குத் தான் இனி இங்கு
தமிழ் என்று பேர்.
அது வரைக்கும் இங்கு வெறும்
பேருக்குத்தான் தமிழென்று பேர்!
___________________________________________
எப்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக