வியாழன், 15 ஆகஸ்ட், 2024

தங்கலான்

 

தங்கலான்

__________________________


இது படம் அல்ல.

விருதுப்பசி எடுத்த‌

விலங்கு இரைச்சல்களும் அல்ல.

ஒரு திரைக்கதையை

மண்ணின் உயிர்ப்பாக‌

உயர்த்திப்பிடிக்க‌

தன் ரத்த சதையை

தன் இதயத்துடிப்புகளை

தன் மூச்சுக்கடலின்

அடி ஆழங்களை

வைத்து வேள்வி செய்த‌

ஒரு கலைஞனின்

உணர்ச்சிப்பிழம்பு

பிக் பேங்காக‌

அந்த செல்லுலாய்ட் 

பிரபஞ்சத்தில்

வெடித்துச் சிதறியிருக்குமோ?

படம் இன்னும் பார்க்கவில்லை.

பா ரஞ்சித்

விக்ரம்

இவர்களின் 

முந்தைய அர்ப்பணிப்புகளே

ஆயிரம் கதை சொல்லுமே.

படத்தின் வெற்றிக்கு

என் மனம் ஆழ்ந்த வாழ்த்துக்கள்.

அடக்குமுறையை ருசி கண்ட‌

மேல் தட்டினருக்கும்

ஒடுக்குமுறையின் பசிக்கு

இரையாகிப்போன‌

கீழ் தட்டினருக்கும்

இடையே எரிந்து கொண்டிருப்பது

வெறும் தீ அல்ல.

அரைவேக்காட்டு உள்ளங்களின்

நீண்ட நெடிய‌ நூற்றாண்டுகள் அவை.

கடவுள் புராணங்கள் எல்லாம்

மிதித்து நசுக்கும் சடங்குகளில்

கூழாகிப்போன மக்களின்

கூக்குரல்கள் எல்லாம் தான் அவை.

செத்துப்போன சவக்களையின் 

வர்ணமயமாய் 

வலம் வருகின்றவையே அவை.

மனிதமே கருவறுக்கப்படும்

கொடுமைகளை

சுட்டுச்சாம்பலாக்கும்

நவீன மின் தகனமேடைகள் தான்

இந்த வகை சினிமாக்கள்.

இவை ஊதுவத்திப்புகையாய் நெளியும்

வரிக்கோடுகள் அல்ல.

ஊழித்தீயின் வெப்பம் கருவுயிர்க்கும்

மௌன மசக்கைகள்.

கனல் யுகம் பிரசவிக்கட்டும்.

சமநீதியின் கனவு யுகம் 

கதிர் விரிக்கட்டும்.


_____________________________________________________

சொற்கீரன்.






________________________________________

சொற்கீரன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக