ஒரு நாவல் எழுத ஆசை.
அதையும் எழுத ஆசை என்று
சொல்லும்போதே
வைரமுத்து போல
சின்ன சின்ன ஆசை என்றும்
ரஹ்மானைப்போல
நெஞ்சை வருடும் இசையிலும் தான்
சொல்ல ஆசை.
மீன் பிடித்து மீனை
விட்டு விட ஆசை என்று
எழுதியிருப்பார்.
அது கவிதை வரி தானே
என்று எண்ண எனக்குக்தோன்றவே
இல்லை.
அந்த சில நிமிட உயிர்த்துடிப்பை
மீனுக்கு ஏற்படுத்தி எழுதிப்பார்க்க
ஒரு கவிஞன் ஆசைப்பட்டான்
என்பது எனக்கு
ஒரு பெரிய முரண்பாடு.
அவர் ஒரு "மாமிச பட்சிணியாய்"
இருப்பதால்
இதில் என்ன இருக்கிறது
என்று அவருக்கு தோன்றி
பாட்டு உருவெடுத்திருக்கலாம்.
ஆனாலும் அவரது மொத்தக்கவிதையின்
அற்புத அழகில்
இது யாருக்கும் தோன்ற வழியில்லை.
போகட்டும்.
நாவலும் எனக்கு
அப்படி ஒரு மீன் தான்.
சொற்களை நீள நீளமாக
இழுத்துக்கொண்டே போய்
அந்த சவ்வு மிட்டாய்க்காரன்
அதில் கிளி மயில் கடிகாரம்
எல்லாம் செய்வானே அது போல் தான்
இதுவும்.
சொற்களின் நீள் வதை தான்
நாவல் என
நான் நினைத்தால்
இது இயல்பாய் கிள்ர்ந்து வரும்
சிந்தனையை
சித்திரவதை என நினைக்கும்
ஒரு குறுகிய வட்டம் என்றும்
எனக்கு தோன்றுகிறது.
பொறுமையும் விடாப்பிடியும்
ஆயிரம் தவசிகளின்
ஆழ்நிலை முக்குளிகளும் அல்லவா
வேண்டும் நாவல் எழுத!
நான் என்னை கவிஞன் என்று
எண்ணிக்கொண்டு
சொற்களோடு அதை
கிள்ளியும் நுள்ளியும்
விளையாடுவேன்.
நான் நாவலின்
தலையணை போன்ற
கனபரிமாணத்துள்
திணிக்கப்பட முடியாதவன்.
ஆனால்
உலக இலக்கியம் கூர்மையும் வெளிச்சமும்
பெற்றது
நாவல்களில் தான்.
இப்போதைக்கு
ஒரு கவிதையைக்கொண்டு
நாவல் என்ற அந்த சட்டி பானையை
தட்டி கொட்டிப்பார்த்து
அதன் இதய சுருதியை
தொட்டுப்பார்த்து விட்டேன்.
இதயம் எனும் "வோர்ம் ஹோலுக்குள்"
ஆமா அப்பா ஆமாம்
அந்த காதலுக்குள் தான்
நுழைந்து பார்த்து
எழுதிக்கொள்ள முயற்சி செய்யலாம்.
இப்போது
கவிதைகளை
வேர்க்கடலை போல கொறிக்க
எழுதலாம்.
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக