பிழைதிருத்தம் வருவதற்குள்
பிணக்குவியல் லட்சங்களில்.
எங்கே லட்சியங்கள்
எனத்தேடுவதற்குள்
மனிதம் கிடந்தது
சவக்கிடங்கில்.
கவிதைக்குள்
மூட்டியிருக்கிறீர்கள்
மா பெரும் தீ!
_______________________________
சொற்கீரன்
(ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிதைக்கு
ஒரு மின்னூட்டம்...02.09.2024)
________________________________________________________________________
நிலத்தாளில்
நீர்ம யாப்பு!
என்ன அருமையான
எழுத்துக்கோர்ப்பு?
தமிழ்க்குழம்பு
எரிமலை சீறினாலும்
தண்ணிய குழம்பு இது.
உங்களின் இந்த "லாவா"
தமிழ் மொழிக்காதலர்களின்
ஊற்றுச்சுரப்பில்
தண்பூ தண்ணிழல்
நறும்பூ நறுநிழல் என்று
யாப்புச் சிலம்பின்
பரல்களை தெறிக்க
விட்டுக்கொண்டிருக்கின்றனவே!
விளிம்புகள் உடைந்த கோட்டில்
நின்று
பெரு மகிழ்வு எய்திக்
கொண்டிருக்கிறோம்.
நன்றி!
_____________________________________
சொற்கீரன்.
ஈரோடு தமிழன்பன் கவிதைக்கு பின்னூட்டம்
____________________________________________
30.08.2024
யார் அம்பாளா பேசுறது
என்பது போல்
கேட்கிறது
திருகிய தலையுடன் நிற்கும்
விநாயகனைப்பார்த்து இது.
வெறும் சூட்சுமம்.
வெறும் அடையாளம்
என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால்
காலத்தின் இந்த திருகு தாளமே
"பரிணாமத்தின்"
இந்த அரைவேக்காட்டுத்தனம்.
உங்கள் கவிதை
சொற்களை எங்கோ
அந்த "பெருவெடிப்பின்"
சந்தி முனைக்கு அல்லவா
இழுத்துச்செல்கிறது.
சிறந்த சொல் நுட்பம்
உங்கள் எழுத்து!
_________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக