குமிழிகள்...
சமுதாயத்தின் பெருமூச்சுகள்
இவை.
__________________________________
ஆடுவோம் பாடுவோம்
___________________________
மரபு என்பதும்
உண்மை அடியில்
மறந்தே போய்விடுகிறது
என்னும்
மறபு தானே.
சுதந்திரத்தின் உட்பொருள்
இன்னும்
இமை விரிக்காத வேளையில்
எதை இங்கே சுதந்திரம் என்பது?
கை விலங்குகள் உடைந்ததாக
ஆடுவோம் பாடுவோம்
"வர்ண வர்ணமாய்"
இந்த கருத்துவிலங்குகளோடு.
________________________________
சொற்கீரன்.
தங்கலான்
மேக் அப் போட்டு
உடல் வருத்தி
உயிர்ப்போடு நடித்தது
விக்ரம் தான்.
ஆனால்
அவ்வளவும்
அரசியலுக்குள்
ஒரு அரசியல் தேடும்
பா ரஞ்சித்திற்கான
"மிமிக்ரி"
________________________________
சொற்கீரன்
நாமெல்லாம்
கடவுள் பிசைந்த மண்ணின்
பாத்திரங்கள் தானே.
அவர் எந்த பாத்திரத்தில்
இருக்கிறார் என்று
நூல் சுற்றிக்காட்டியது
சில சைத்தான்கள் தான்.
கடவுள் அதில் மட்டும் இருப்பதாய்
அவை கூப்பாடு போட்டன.
இதன் மூலம்
அந்த சாஸ்திரங்கள்
சொன்னது இது தான்.
கடவுள்கள் எல்லாம்
சைத்தான்களின் மந்திரத்தில் தான்
இருக்கின்றன.
பிரபஞ்சம் எல்லாமே
வர்ணமற்ற அவர்ணமாய்
வாலறிவு ஆன பின்னே
நூலின் அடையாளங்கள்
எதற்கு இங்கே?
எல்லா மண்ணும் நானே
என்று
அவர் காட்டிய பின்
எதற்கு இந்த கூச்சல்களில்
பூசனைகள்?
_________________________________________________-
சொற்கீரன்.
மௌவல் பின்னூட்டங்கள்
காதல்
_________________________
16.08.2024
காதல்
_________________________
கழுவில் ஏற்றப்பட்டவன்
காதல் என்று
நிப்பில் நீல ரத்தம்
சிந்துகின்றான்.
_________________
எப்சி
(பின்னூட்டம் இயலிசம் மௌவல் 16.08.24)
இதோ ஒரு காதல் கவிதை
________________________________
முகம் இங்கே
மூக்கு அங்கே
கண்கள்
முட்டைகள் போல்
கழன்று அங்கே.
இன்னும் கை கால்கள்
எங்கெங்கோ
துண்டு துண்டாய்
அப்பாடா
போதும் போதும்
அந்த கசாப்புக்கடைக்காரனிடம்
இரவல் வாங்கி
இந்தக்கவிதையை
எழுதி முடிப்பதற்குள்.
_____________________________
எப்சி
(பின்னூட்டம் மௌவல் முகமது பாட்சா
16.08.2024)
______________________________________________
மௌவல் பின்னூட்டங்கள்/18.08.24
எப்போது
அந்த காக்காவை
காக்கா பிடிக்கப்பொகிறீர்கள்
அட விடுங்கள் இது
வெறும் விளையாட்டு தான் என்று!
________________________________
எப்சி
அந்த ஒலி ஒரு
மதுபானக்கிடங்கு.
அப்புறம் தான்
அது கொலுசு.
_______________________________
எப்சி
உங்கள் கருத்து
மிக மிக அருமை.
ஆனால்
இரண்டாயிரம் ஆண்டுகளின்
இருட்டில்
அடம்பிடித்த மழையில்
அந்த "நான்கு வர்ணம்"
கெட்டிப்பட்டு விட்ட்தே.
____________________________________
எப்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக