உலக நாதன் திடீரென்று
தூக்கத்திலிருந்து
விலுக்கென்று எழுந்து கொண்டார்.
பயங்கரக்கனவு.
இந்த உலகத்தின் மேலுறை
அடிக்கோளத்திலிருந்து
கனவு கண்டாராம்.
எத்தனையோ ஹாலிவுட் படங்கள்
இப்படி படங்கள் எடுத்து
நம் வயிற்றைக்கலக்கி
குடலைப்புரட்டி
வெளியே தள்ளியிருக்கின்றனவே.
ஒரு கடுகளவு மாற்றமே
நம்மை தடம் புரளச்செய்து
தலையில் கை வைத்து
உட்காரவைத்துவிட்டதே.
வயநாடு நிலச்சரிவை சொல்கிறேன்.
நம்மச்செல்ல கம்பெனிகள்
கொஞ்சம் கலக்கமுற்றாலே
லட்சம் லட்சம் கோடிகள்
கொட்டத்தயாராயிருக்கும்
இந்த செங்கோல்கள்
இப்படி மலையே சரிந்து
மக்கள் புதைந்து மாயமாய்
போனபிறகும்
உதவி எதுவும் செய்யக்கூடாது
என்று
பிரசன்னம் பார்த்து
சோழி குலுக்கிக்கொண்டிருக்கும்
கொடுமையை என்னவென்று சொல்வது?
இப்போது
அந்த செங்கோலைப்பார்த்தால்
அது வளைந்து தான் கிடக்கிடக்கும் .
ஆனாலும்
இதற்கு குடமுழக்கு செய்வதற்கே
அந்த மலைகளின்
கண்ணீரை எல்லாம்
எடுத்துக்கொள்வார்கள்.
உலகநாதன் என்னும் அந்த உலகம்
தன் தலையில் அடித்துக்கொண்டது.
அதையும்
கோடிக்கணக்கான அளவு பருத்திருக்கும்
ஏதோ ஒரு
அந்த "ஹல்க்" மனிதன்
பச்சையாய் பச்சையாய்
கோரமாய் சிரித்துக்கொண்டு
உலகையே பக்கோடா மாதிரி
நறுக் மொறுக்கென்று
தின்பத்தைக் காட்டி
ஆலிவிட்டும் பாலிவுட்டும்
கல்லா கட்டியே களிப்படையும்.
உலகநாதரே இன்னொரு கனவு காணும்.
திடீரென்று
இந்த இந்தியத்துணைக்கண்டமே
உலகத்திலிருந்து
புட்டுக்கிணு போய்விட்டது
என்று.
---------------------------------------------------------------------------------------------
எப்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக