"எல்லாம் இன்ப மயம்"...
________________________________________________
ருத்ரா.
வலியிலிருந்து
வலி வரைக்கும்
என்ன இருக்கிறது?
வலியே தான்.
சாக்கரின் தடவிக்கொண்டு.
வாழ்க்கை
என்று பெயர் சொல்லிக்கொண்டு.
..............
கேட்டால்
அந்தக் காலத்து ரிஷிக்கள்
அதை பிரம்மம் என்பார்கள்.
வலியைப்போயா
கடவுள் என்று
பூஜை செய்வது?
அது பிரம்மானந்தம்!
அது என்ன வென்று
எவருக்குமே தெரியாது.
அது என்ன வாகத்தான்
இருக்கும்?
என்று மண்டைக்குடைச்சல் வரும்.
அதற்கு
சுழற்றி சுழற்றி மந்திரங்கள்
சொல்ல வேண்டியிருக்கும்.
இந்த வலி என்ன வலி என்று
இனம் புரியாத ஒரு வலியாகி
நம்மை முறுக்கிக்கொண்டே இருக்கும்.
இந்த வலி என்பது....
போதும்டா சாமி.
யார் சொன்னது இதை வலி என்று?
திவ்யம்...திவ்யம்
பரம சுகமே இது..
......
அப்புறம்
எல்லா வலிகளும் பாடுகின்றன..
"எல்லாம் இன்ப மயம்"...
_______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக