பா ரஞ்சித் அவர்களே
_________________________________________
பா ரஞ்சித் அவர்களே
நீங்கள்
ஒரு கொதிக்கும்
வரலாற்றின்
உருவகமாக இருப்பதால்
உங்கள்
சிந்தனைச்சிதறல்களில் கூட
சில்லறையான நிகழ்வுகள் தான்
என்று
வாளாயிருந்ததே இல்லை.
ஒவ்வொரு வாளாய் ஆக்கித்தான்
ஒவ்வொரு தருணங்களையும்
ஒடுக்குமுறை அநியாயங்களை
வெட்டி வீழ்த்தும் வீரனாக
உலா வருகிறீர்கள்.
திரைக்கதைகளில் கூட
அந்த நெருப்பின் கரு தான்
கடல் வெப்பமாய்
பொங்கி நிற்கிறது.
இதை எப்போதாவது புரிந்து
கொண்டிருக்கிறீர்களா?
சமுதாயம்
ஒரு அடுக்கு இதழ் ரோஜா
என்றால்
அடுக்கு அடுக்கான முட்களையும்
அது புதைத்து வைத்திருக்கிறது
என்பதும் உண்மை தானே.
அதனால்
ஒரு பிராமணன் கூட
மனிதம் கொல்லப்பட்ட
அத்ர்மங்களால்
ரத்தம் சிந்தாமல்
படுகொலைச்செய்யப்படும் போது
தலித் ஆகிறான்.
தளை எனும் தமிழ்ச்சொல் தான்
தளைக்கப்பட்ட அடிமை மனிதன்
என்று
கூர்மையாய் அந்த ஆதிக்கத்தை
அம்பலப்படுத்துகிறது.
நான்கு வர்ணத்தின்
முதல் வர்ணம்
எஞ்சிய எல்லா தமிழர்களையும்
அந்த அறியாமைத்தளை கொண்டு தான்
அடக்கிக்கொண்டு இருக்கிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் சேரியை மட்டுமே
தனி ராஜ்யமாக்கி
அதில் மதம் தோய்த்த வர்ணத்தில்
ஒரு தேசியக்கொடியை ஏற்றி
பிளவு வாதத்தின்
பகடைக்காயை
உருட்டநினைப்பவர்களின்
கையாகவும் பகடையாகவும்
ஆகிப்போய்விடும்
ஒரு பேரிடர் நம் தலைமேல் இருக்கிறது
என்ற மிக மிகப் பாமரத்தனமான
உண்மை உங்களுக்குள்
உஷ்ணம் ஏற்படுத்தாமலா இருக்கும்?
தமிழ் மக்கள் அதை நம்பவில்லை.
அதனால் தான்
தமிழ் மக்கள் உங்களை நம்புகிறார்கள்.
அதனால்
உங்கள் சீற்றம் அல்லது ஆவேசம்
ஏதோ ஒரு வேண்டத்தகாத சினிமாவுக்கான
ஒத்திகையாக இருந்து விடக்கூடாதே
என்று தான் அவர்கள் அஞ்சுகிறார்கள்.
உங்கள் மைல்கற்கள்
தடம் புரண்டு விடக்கூடாது என்றும்
எதோ கோயில் கட்ட
செங்கல் தூக்கும் பயணமாக
அது மாறிவிடக்கூடாது என்றும்
அவர்கள் அஞ்சுகிறார்கள்.
__________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக