வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

கொட்டுக்காளி

கொட்டுக்காளி

_____________________________

சொற்கீரன்.


சேரி மக்கள் என்று

ஒற்றைவரியில்

புறம் தள்ளி விடும்

நம் சமுதாயத்தின்

சாதித்தீ ஒரு நாள்

திரையில் சொக்கப்பனை

கொளுத்தியது

அதுவே

கொட்டுக்காளி.

பேய்

பேயோட்டி

பேயின் வெறி

இதையெல்லாம்

ஒரு கடவுள் முன்னே

கொட்டு அடித்துக்கொண்டு

கொட்டம் அடிக்கும்

உளவியலின்

உன்மத்தம் பிடித்த‌

அறிவின் ஒளி கழன்ற‌

இருட்டுச்சத்தங்களை

"ஆரக்கிள்" என்ற‌

கணினிச்சொல்லில்

கிரேக்கமொழி வேடத்தில்

சுருட்டிக்கொண்டு கிடந்தோம்.

டிஜிடலில்

நாம் விண்வெளியின் 

தோலுரிக்கும்

உயரத்தில் நின்றபோதும்

கீழே

அதள பாதாளத்தில்

மிருகங்களையும் விட கேவலமான‌

உருவங்களாய் ஊர்ந்து கொண்டிருக்கிறோம்

என்பதன்

சின்ன பொறி தான்

கொட்டுக்காளி.

அப்போகாலிப்ஸ் என்று

ஆலிவுட்டுக்காரர்கள்

இப்படி எத்தனையோ 

கொட்டு அடித்திருக்கிறார்கள்.

"வெளிச்சப்பாடு"என்று

அன்று 

ஒரு மலையாளப்படம் வந்தது.

அதிலும் 

இந்த கோடாங்கி உறுமல்கள்

"சாமி"களின் செவிப்பறையில் 

அதிர அதிர 

அடித்துக்காட்டியது

அயோத்தி ராமர் என்றாலும்

இஸ்ரோவுக்கு விடை கொடுத்து

அனுப்பும்

திருப்பதி சுவாமி என்றாலும்

இன்னும் நம்

கோவில்கள் ஸ்லோகங்கள் மந்திரங்கள்

கும்பாபிஷேகங்கள்

தேரோட்டங்கள்

இத்யாதி இத்யாதி

என்றாலும்

நாம் இன்னும் எங்கு இருக்கிறோம்

என்று

பறை சாற்றிக்கொண்டிருக்கின்றன.

பார்லிமெண்டுகள் தேவையில்லை.

பங்கு மார்க்கெட்டுகள் தேவையில்லை.

நூலகங்கள் தேவையில்லை.

ஏன்

இந்த கம்பியூட்டர் குப்பைகள் கூட‌

தேவையில்லை.

இந்தப்படத்தின் கதைக்களம் என்று

வெறுமையாய்

கொச்சைப்படுத்திவிட்டு

நாம் இயல்பாய் உட்கார்ந்து

பீட்சா சவைத்துக்

கொண்டிருக்க முடியாது.

நம் மூளை அதன் சிந்தனை

அதனுள் செதில் செதிலாய்

இறைந்து கிடக்கும்

சமுதாய ஓர்மையின் நொறுங்கிப்போன‌

அந்த கூரிய கண்ணாடி சில்லுகள் 

எல்லாம்

ரத்தம் பீய்ச்சவேண்டும்.

ஒரு நாகரிக உணர்வின் 

தீப்பற்றிக்கொள்ளவேண்டும்.

அதனால் தான் அந்த புகழ்பெற்ற‌

திரைப்பட இயக்குநர்

போங்கடா நீங்களும் உங்கள்

அலங்கார ஜிகினாக்களும்

என்று

துகிலிரித்த அம்மணத்தில்

உணர்ச்சியின் சிகரம் ஏறியிருக்கிறார்.

இது வரை

பாதேர் பாஞ்சாலி என்று

உச்சரித்துக்

கொண்டிருந்தோமே.

போதும்

இந்தப்படம் நம்மை எச்சரிக்கிறது.

எரித்துக்காட்டுகிறது

என்று மேலோங்கிய ஒரு கருத்தில்

அவர் பொங்கியிருப்பதும் 

மிகப்பொருத்தமே.

"வாழை" "கொட்டுக்காளி"

இவையெல்லாம்

நம் தேசப்படம் கந்தல் கந்தலாய்

கிழிந்து அவலங்களில்

அல்லாடுகின்றனவே

என்பதை அல்லவா

குத்திக்கிளறிக்கொண்டிருக்கின்றன.

மனிதம் தொலைந்தே போய்விட்ட‌

இந்த மண்ணில்

எல்லோருக்கும் மொத்தமாய்

தேவை

ஒரு பிரம்மாண்ட

மன நல மருத்துவ மனை!


________________________________________________‍‍



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக