ஏலியன்
______________________
ஏன் அழுகிறாய்?
நிறுத்து அழுகையை.
விசும்பல் நிற்கவில்லை.
யார் அழுவது?
முகம் தெரியவில்லை.
இருந்தாலும்
அழுகையின் அதிர்வு
தாங்க இயலாதது.
எங்கோ மில்லியன் ஒளியாண்டுகள்
தூரத்திலிருந்த
மையத்திலிருந்தா
அந்த அழுகை?
அப்படித்தான்
உணரப்படுகிறது.
எப்படி அது?
மனிதம்
உணர்வு
எதுவுமே அற்றுப்போன
ஒரு பிழம்புக்கும்
கண் உண்டா?
கண்ணீர் உண்டா?
துன்பத்தீன் தீ
அங்குமா போய் பற்றிக்
கொண்டிருக்கும்?
கேவல் ஒலியின்
கூர்மையும்
அடர்த்தியும்
அந்த ஸ்பெக்ட்ரமின்
கோடுகளை
தாறு மாறாய் காட்டுகிறது.
ஐன்ஸ்ட்டின் கூறும்
காஸாலிடி
என்ன விளம்புகிறது?
அண்டம் முழுவதும்
பொதுச்சார்பு ஒன்று
இருக்கிறது என்கிறார்.
அதன் அதிர்வு இது என்கிறார்.
எது நிறை? எது ஆற்றல்?
அதுவே
இதுவாகவும்
இதுவே அதுவாகவும்
மாறிக்கொள்ளூம்
ட்யூவாலிடி என்கிறார்.
சரி...
ஏன் இந்த அழுகை?
என்னது?
யார் சொன்னது அழுகை என்று?
பிக் பேங்கின்
இன்னொரு மிச்ச சொச்சமடா இது.
போ..போ
எச்சரிக்கை கொள்.
எப்போது வேண்டுமானாலும்
உன் அநியாயக்கட்டடங்கள்
இடிந்து தரைமட்டம் ஆகலாம்.
போ...
அந்த விசும்பல்
எதையோ நோக்கி
விஸ்வரூபம் எடுக்க முனைந்து
கொண்டிருக்கிறது.
எல்லாம் வியர்த்துப்போகிறது.
எல்லாம் சில்லிட்டுப்போகிறது.
ஒரு புழு கூட
ஆயிரம் வானங்களின்
பருமனுக்கு
புடைத்துக்கொண்டு
நெளியத்தொடங்குகிறது.
என்ன நடக்கிறது?
___________________________
காஸ்மாலஜிஸ்ட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக