ஹலோ
____________________________________________
கல்லாடன்
என்னய்யா
எப்டி இருக்கீங்க?
எல்லா நல்லாத்தான் இருக்கேன்
பெரிசா கேக்க வந்தீட்டிங்க?
ஏம்பா
என்னாச்சு?
ஏய்யா இங்கே மொடங்கி கெடக்கீங்க?
ஆக வேண்டியத பாருங்க.
சும்மா
அந்த கம்பியூட்டர்ல
லொட்டு லோட்டுன்னு தட்டிகிட்டுன்னு
ஹை கம்மாண்ட் அதட்டீட்டாங்களா?
சரி விடுங்க?
இங்கேயும் அப்டித்தான்.
ஒரு விஷயம் முடியணும்னு
நடையா நடந்துகிட்டு இருக்கேன்.
ஒங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசைண்ணு
இடிப்புரைகள் கேட்டு கேட்டு
அந்த மீசை கூட
ஏதோ கம்ப்ளிப்பூச்சி மாதிரி
மூக்குக்கு கீழே
ஊராமல் ஊர்ந்து கிட்டு இருக்கு...
அது சரி..என்ன சொன்னீங்க என்ன சொன்னீங்க..
"யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு?"
ஆஹா! அருமையான குறள்ங்க!
...........
................
ஒன்றுமில்லை
"ஹலோ"என்று
எதிர்ப்படும் இருவர்கள்
சொல்லிக்கொண்டார்கள்.
சொல்ல நினைப்பவை எல்லாம்
பேசாமல் வெறுமே
முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும்
அசைச்சொற்களே
அந்த "ஹலோ"
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக