தமிழன் வரலாறா? கிலோ என்ன விலை?
____________________________________________________
அன்புள்ள திரு சேகர் கிருஷ்ணசாமி அவர்களே
அந்த துணி வெளுக்கும் தோழர் அந்த ஆதிக்க சாமிகளை வெளு வெளு என்று வெளுத்துக்கட்டாத குறையாய்
உலக்கினாரே! உண்மையில் தமிழன் வரலாற்று ஏடுகள் இனி தான் விறு விறுப்பாய் எழுதப்படும் போலிருக்கிறது.
ஆமா...மீதி நிகழ்வுகளைத் தொடருங்கள்.அதைக்கதை என்று நினைத்து சும்மா உச் கொட்டிக்கொள்ள விரும்பவில்லை நான்.தமிழன் வரலாறு இந்த கொடூர சூழ்ச்சிகளில் பின்னப்பட்டது தான்.அவா நமக்கு மட்டும் சாமி இல்லை.அந்த சாமிக்கே கூட சாமி தான்.ஏனெனில் சாமி என்று ஒரு மண்ணும் இல்லை என்பது அவாளுக்கே தெரியும்.வேதம் அப்படி இப்படின்னு இவாள் படிக்க ஆரம்பிச்சுட்டா அவாள் குட்டு உடைஞ்சுடும்.வெள்ளைக்காரன்
அதை உரித்துக்காட்டி (ஆங்கிலம்) விட்டான்.இதுக்கும் மேலே "தவம்"னு ஒரு கூர்மையான சிந்தனைக்குள் இறங்கிவிட்டால் எல்லாம் புரிந்து விடும் அது பிராமண விஷம் என்று.அதனால் தான் அந்த சம்புகனை
கருணாமூர்த்தியான ராமனே வெட்டி எறிந்தான்.போகட்டும்.இதைச்சொல்லி சொல்லி தமிழ் நாட்டுக் கல்லும்
புல்லும் கூட கனலை கொப்புளித்துக்கொண்டுதான் இருக்கிறது.நமக்குள் பாய்ச்சப்பட்ட அந்த சாதி விஷம்
இன்னும் முறிந்த பாடில்லை.கீழ்ச்சாதி இடைச்சாதி இடையே உள்ள குத்துவெட்டுகளைக்கொண்டு நாம் இன்னும்
கும்பாபிஷேகங்களும் தேரோட்டங்களும் நடத்திக்கொண்டிருக்கிற அநீதிகளின் உச்சியில் தான்
அவாள் இன்னும் உட்கார்ந்து கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.பெரியார் எனும் மாமேதை தமிழனின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக