அன்பிற்கினிய ஈரோடு தமிழன்பன் அவர்களே
மனித மனம் அவ்வளவு குழைவாய்
இருக்கையில்
அதையும்
நெகிழ்வாய்
விரல் நோகாமல்
விரலின் நகம் நோகாமல்
கிடைப்பவர் அதை அடையும்போது கூட
அவருக்கு நொந்து போகும் எந்த வித
கூச்சமும் இல்லாமல் இருக்கவேண்டுமே
என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது.
உங்களது இன்றைய கவிதையில்!
மனித நாகரிகம் படிக்க
அந்த எலும்புக்கூட்டுச்சிதிலங்களை
தோண்டி படிக்க வேண்டியதில்லை.
அத்தனை நுண்ணியமும் கண்ணியமும்
உங்கள் எழுத்துக்களில் எல்லாம்
தூவிக்கிடக்கிறது.
ஆயிரம் இமயங்கள் என் மீது
அமுக்கி நசுக்கிக்கொண்டிருப்பதை
வருடிக் கொடுத்து
தட்டிஎழுப்பும்
அனிச்சங்களின் பூங்கொத்துகளா
உங்கள் சொற்றொடர்கள்!
நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள்.
எங்கோ ஊர்ந்து கொண்டிருக்கும்
சிற்றெரும்பு வரிசைகள் கூட
கலையாமல் கவலையில்லாமல்
பயணம் தொடரட்டும்.
______________________________________________________
கல்லாடன்.
04.06.2024.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக