சன்னல் என்று தான்
திறந்து பார்த்தேன்.
அதற்குள் ஆயிரம் குளிர் நிலாக்கள்.
சில ஒளியை
துளிர்த்தன.
சில அவி சொரிந்து
ஆயிரம் அக்கினி வேட்டல்களை
சொற்களில் விதைத்து விதைத்து
தூவின.
அது எப்படி
சொற்கள் பிரசவம் ஆகும் முன்னமேயே
ஆயிரம் ஆயிரம் பிரவாகங்கள்.
வரலாறு வழி கீறியது.
இலக்கியம் இதயமாய்
குலுங்கி குலுங்கி ஒலித்தது
கொலுசுகளாய்.
அழகிய கால்களின்
ஆயிரங்கால் மண்டபங்கள் வழியே
காவிரி பிதுங்கி பிதுங்கி
நுரை விரிப்பில் கம்பளம் விரித்தாள்.
என்ன கேள்விகள்?
என்ன விடைகள்?
வரிகள் வரிகளாய்
சுழிகளுக்குள் கருவுற்று
சுழிகளாய் முகம் காட்டும்
சொற்றொடர்களில்
தமிழ் பொன் உருக்கி
தமிழ்ச் சிறகுகள்
அண்டம் முழுதும்
அளைந்து அளைந்து சொன்னது:
அதிர்வுகளின் மொழி
ஸ்ட்ரிங்க் தியரி.
ஓலைகள் உரசிய உரசலில்
நான் புலவர்களின் எண்ணத்தில்
பொறிகளாய் தெறித்தேன்.
இந்த தொன்மையில் தான்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
ஆராய்ச்சியின்
தூக்கணங்குருவிக்கூடுகள்.
உதிர்ந்தவற்றில்
பொறுக்கிக்கொண்டனர்
எலக்ட்ரான் என்றும் ஃபோட்டான் என்றும்
குளுவான்கள் என்றும்.
தமிழுக்கும் அமுது என்று பேர்
என்று தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக