சனி, 15 ஜூன், 2024

செங்கீரன் எழுதுகிறேன்

 செங்கீரன் எழுதுகிறேன்

______________________________________________‍


ஒரு அன்புக்கவிஞர் (அஹமது இப்ராஹிம்)

புள்ளியில் தொடங்கி

அழகிய ஒளிப்படத்தில்

சொற்களை பிழிந்து தந்தார்.

புள்ளிக்கோலம் வெகு அழகு.

ஒரு புள்ளியில் தொடங்கி

அந்த புள்ளியில் ஒன்றிப்போவதே

இன்றைய‌

அதி நவீன விஞ்ஞானத்தின் தாகம்

சிம்மெட்ரி

க்ராண்ட் யுனிஃபிகேஷன்

இன்வேரியன்ஸ்

இவற்றை உற்று நோக்குவதே

குவாண்டம்.

அதுவும் கூட‌

ஒரு புள்ளி தன்னை

புள்ளியாயும்

மறுத்தே அல்லது

மரித்தே

அதை படம் காட்டுகிறது.

ஒரு புள்ளி

எங்கோ பல பில்லியன்

ஒளியாண்டு தள்ளி இருக்கும்

இருக்கும் அதே புள்ளியோடு

கொஞ்சி குலாவிக்கொண்டு

இருக்கமுடியுமா?

அது தான் "குவான்டம் என்டேங்கில்மென்ட்"

இந்தப்புள்ளியைப்போய்

கரும்புள்ளி செம்புள்ளி என்று

வர்ணாசிரம மிலேச்சத்தனங்களில்

கொண்டு போய் தள்ளி விடவேண்டாம்.

இந்த உயிரின் சித்தாந்தம் 

பிரம்மம் என்று ஆரம்பித்து

கடைசியில் ஒரு

ரத்தம் சொட்டும் கத்தியோடு

மந்திர இரைச்சல்களில்

ஒளிந்து கொண்டிருக்கும்

ஒரு நச்சுவட்டம் 

அறியாமை எனும் தூக்குக்கயிறைத்தான்

இந்த புள்ளிக்கு மாட்டப்பார்க்கிறது.

இதிலிருந்து தப்பிப்பதே

உண்மையான மோட்சம்.

கைலாச வைகுண்டங்கள் எல்லாம்

ஒரு பொய் இனிப்பை சப்பக்கொடுத்திருக்கும்

போதையின் லாலி பாப்புகள் மட்டுமே

_________________________________________________

செங்கீரன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக