வியாழன், 13 ஜூன், 2024

தவளை முனிவன்.

 தவளை முனிவன்.

_______________________________________

கல்லாடன்.



என்ன இந்த வாழ்க்கை?

இந்தக் கேள்விகள்

காவி உடைகளில் தீர்வு

காணப்பெறுபவை அல்ல.

தவளை போல் ஒரு முனிவன்

வறள வறள இரைச்சல் செய்து

உபனிஷதம் சொல்லிவிட்டுப் 

போயிருக்கிறான்.

அந்த "மாண்டூக்யன்"

அஸ்பர்ஸ யோகம் செய்

அது தான் உனக்கு முக்தி

என்று சொல்கின்றான்.

இந்த உலகத்தை நீ

ஆசையால் தொடாதே.

பிரம்மம் சொல்கிறது

நான்கு வர்ணங்கள் என்று

நீ

நினைக்கும்போது

அதை வைத்து

நீ

ஒரு உயரத்தை விரும்பும்போது

இந்த உலகத்தை உன் 

மனத்தால் ஸ்பர்ஸித்து

ஆபாசம் செய்து விடுகிறாய்.

பிரம்மம் என்று ஒன்றை

கற்பனை செய்யும்போது

உன் ஞானத்தையே 

ஆபாசம் செய்து விடுகிறாய்.

ஞானங்களால் தீண்டப்பப்டாத‌

ஒரு ஞானம் உண்டு.

அது என்ன?

இந்த உலகத்தையே உன்னுள்ளும்

உன்னுள்ளேயே இந்த உலகத்தையும்

ஒரு சமத்தன்மையோடு

உள்ளும் ஓர்மை பற்றிய‌

ஞானம் ஏதேனும் உண்டா?

என்ன முனிவரே?

ஏதேதோ சொல்கின்றீர்.

அப்போ வர்ணாஸ்ரமம்?

கோத்ரஸ்தானம்?

அடே! ஞான சூன்யம் 

இப்போது தானே சொன்னேன்.

ஆசையின் அசைவு கூட தொடமுடியாத‌

"அஸ்பர்ஸம்" பற்றி.

இன்னும் ஆதிக்க ருசியை 

சப்பு கொட்டிக்கொண்டு தானே

பிரம்மம் பிரம்மம் என்று

அலைகிறாய்...

தவளை ரிஷி எரிச்சலோடு

தண்ணீருக்குள் குதித்து விட்டார்.

இத்துடன்

மாண்டூக்யோபனிஷதம் முற்றிற்று.

________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக