சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.
________________________________
கல்லாடன்.
அழகான
பெண்ணின் புகைப்படம்
ஒன்று போதும்.
அதில் சொற்களை
ஈ மொய்க்கவிட்டு
லைக்குகளை
ஆயிரக்கணக்கில்
ஜி ஐ எஃப் பாப்கார்ன்ஸ்களின்
துள்ளல்களில் கோர்த்து
உன் முகச்சன்னல்களை
தினம் தினம்
திறந்து மூடுகிறாய்.
இன்று
பிறக்கும்போதே
இறந்து பிறப்பவை தான்
கவிதைகள் என
உலா வருகின்றன.
என்ன ப்ரொ?
இப்படிச்சொல்கிறீர்கள்?
தலைமுறை இடைவெளிக்குள்
இத்தனை காழ்ப்பா?
தெரியவில்லை...
சமுதாயத்தைச் சுற்றி சுற்றி
தீப்பிடிக்கையில்
வர்ண வர்ணமாய்
சோப்புக்குமிழிகள் ஊதுவதில்
என்ன "வைப்" காண்கிறீர்கள்?
சொற்கள் என்றால்
வல்லினம் மெல்லினம்
இடையினம்
இவற்றின்
"சுடிதார்" அலைப்பாய்ச்சல்கள்
தானா?
இன்னும் இன்னும்
முறைத்த ஜீன்களின் கிழிசல்
பார்வைகள் தானா?
போதும்..போதும்
மண்டை கலங்கிய பெரிசுகளே
போய் உட்கார்ந்து
ஜனநாயகத்துக்கு
சொடக்கு எடுத்துக்கொண்டிருங்கள்.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக