ஒரு செல் இரு செல்
அப்புறம் மீன் தவளை
விலங்குகள்..
குரங்குகள்..
இப்படியெல்லாம்
நம் மூளை புகுந்து வந்தபின்
அது யார்ரா
நம்மையே துரத்திக்கொண்டு
பின்னால் வருவது..
என்று
பொறி தட்டுகிறது..
அப்புறம் ஏன்
வானத்திலிருந்து
குரல்கள் உதிர்ந்தன?
முதன் முதல் உள்ளுக்குள்
குமிழியிட்டதற்கு பெயரே
சிந்தனை ஆயிற்று.
அப்புறம் எப்படி அது
விஷ சாராயம் ஆயிற்று.
உயிர்களின் ஊறல்
பாக்கெட்டுகளில் பிரசாதம்.
முக்தியும் பக்தியுமே இங்கு
முட்டுச்சந்துகள்
வசனங்கள் சுவடிகள்
கல்வெட்டுகள்
கொலைவெட்டுகள்.
அது என்னது?
சிவப்பாய் பாய்ந்து
நெளிந்து....
வரலாற்றின் ரத்த ஆறுகள்.
அதில்
கடவுளின் வெறித்தீயே
முதலில்
வடிந்த விஷசாராயம்.
சோமச்செடிக்குள் "ஓம்"
என்று சொல்லி
கசக்கி கசக்கிக்
குடித்ததில்
அறிவு இறந்தது.
மனிதம் வர்ண ரத்தத்தில்
கசாப்பு ஆனது.
வெர்ஷன் 3.0 என்றாலும் சரி
3000.3333...என்றாலும் சரி.
அந்த கழுமரங்களின் அடியில்
ஆயிரக்கணக்காய் நரிகள் ஊளைகள்.
மனித உடல்கள்
குடல்கள் சிதறியிருந்ததில்
பாஷ்யங்களும் சித்தாந்தங்களும்
மந்திரங்களை உமிழ்ந்தன.
பிணங்கள் நூறு விழட்டும்
கோட்டை ஆட்சியை
சுக்கு நூறு ஆக்கலாம்.
மதம் எனும் அபினி என்றானே
ஒரு வரலாற்றுச்சித்தன்.
போதைகளின் ஊற்றே
இங்கே சூழ்ச்சி அரசியல்களின் நாற்று.
__________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக