திங்கள், 3 ஜூன், 2024

"குவாண்டலினி"

THANKS FOR THIS LINK 

How Quantum Physics Defines Our Reality | The History Of Quantum Physics | Watch (msn.com)



"குவாண்டலினி"

_______________________________________

கல்லாடன்.


"குண்டலினி"யெல்லாம் இருக்கட்டும்

இந்த "குவாண்டலினியை" முகர்ந்து பாருங்கள்.

சாமியார்கள் 

அதை பிரம்மவாசனை என்று

ஊத்தி மூடி விடலாம்.

விஞ்ஞானிகள் அந்த பிரமனின்

தாடியைக்கூட உலுக்கு உலுக்கு என்று

உலுக்கி விடுவார்கள்.

ஏன் இவர்கள்

ஹிக்ஸ் போஸானைக்கூட‌

"கடவுள் பார்டிகிள்"

என்று புல்லரித்துக்கொண்டதில்லையா?

கேட்டால் ஜோக் என்பார்கள்.

எப்படியோ போகட்டும்

அந்த குவாண்டம்

பல கோடி ஒளியாண்டுகளுக்கு கூட‌

தன் காலடிகளை நீட்டி வைக்கும்.

அதற்கும் வாமன அவதாரம் என்று

ஒரு தாழங்குடையோடு வருவார்கள்.

கடவுளோடு போட்டி போட‌

இன்னொரு கடவுள் தெவையில்லை.

மனித அறிவுப்பொறிகளே

ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொள்ளும்

தகுதியுடைவை.

இதை ஒரு விளையாட்டு என்று 

எடுத்துக்கொள்ளுவதை விட‌

இதை ரத்தச்சேறு ஆக்கி

அந்த வெறியை வியாபாரம் ஆக்குபவர்களே

நம்மைச்சுற்றிலும் 

கோரைப்பற்கள் கொண்டு

எகிறிஎகிறிகுதித்துக்

கொண்டிருக்கிறார்கள்.

மனிதா!

விழி!

அறி!...படி.

உணர்!

அந்த மூடத்தை தவிடு பொடி

ஆக்கி விடு.

_______________________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக