சனி, 15 ஜூன், 2024

செங்கீரன் எழுதுகிறேன்....3

 செங்கீரன் எழுதுகிறேன்....3



உனக்கேன் இவ்வளவு ஆவேசம்?

அவனவன்

தட்டில் மிச்சர் தின்று கொண்டு

அதில் கிடக்கும்

மொரு மொரு கடலைப்பருப்பையும்

பொறுக்கித்தின்று ருசி பார்த்துக்கொண்டு

இருக்கையில் உனக்கு ஏன் இத்தனை

இறக்கைகள்?

விண்ணின் கோடுகளை

உள்ளங்கைக்கீறல்களில்

உற்றுப்பார்த்து

ராமர் அனுமார் படங்களை

ஹோலோகிராஃப் செய்யும்

சித்தாந்தங்களில் 

பி ஹெச் டி களின் 

ட்ரேஷ் கேன் ஆகிப்போன

விஞ்ஞானங்களுக்கும்

இங்கே பஞ்சமில்லை.

விட மாட்டேன் 

ஆயிரக்க்ணக்கான‌

ஆண்டுகளாய் மக்கிப்போன‌

எலும்புக்கூடுகள் தான்

எங்கள் வரலாறு...

அதற்காக...

எங்கள் சொற்கள்

வெறும் ஒலிக்கூடுகளா?

அந்த "கல் தொன்றி மண் தோன்றாக்காலத்தின்"

வரை படங்களில் "நோவாக்கப்பல்" கூட‌

அன்று தமிழன் கடல் பிளந்துநாடுகள்

தொட்டுத் தழுவிய சுவடுகளின் 

கடற் பதிவுகள் தான்.

தமிழின் "நாவுதல்" என்பது

நாவின் அசைவை அலையாக்கி

மொழியாக்கி நகர்ந்தது தான்.

நாவாய் நோவா ஆனது.


எகிறி எகிறி அந்த மண்துளிகள்

ஒரு சுநாமிக்கு சுருதி கூட்டும் 

மூச்சுகள்

முண்டி வருகின்றன...


______________________________________

செங்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக