ஞாயிறு, 23 ஜூன், 2024

வரிகள்

வரிகள்

________________________________



அந்த ஒற்றை ரோஜா

தன்னையே

பறித்து எடுத்துக்கொண்டு

புறப்பட்டது

அவளிடம் "ப்ரோபோஸ்"பண்ண.

காதலிக்க...என்றெல்லாம்

கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

மெல்ல மெல்ல அது

மிதந்து வருகிறது.

அது அனிச்சமா? அன்னத்தூவியா?

காற்றின் காலடிச்சுவடுகளில் கூட‌

காயத்தின் கசிவுகள்.

அவள் எதிரே அது!

ஏதோ சொற்களின் ஜரிகை வீச்சுகளில்

அங்கே ஒரு

"ஹோலோகிராஃபிக்" மண்டலம்.

அவள்

அதை கையில் பற்றிக்கொண்டாள்.

அதை ஏந்தியது யார்?

அவளுக்கும் அதைப்பற்றிய‌

இன்ப நமைச்சல் ஏதும் இல்லை.

சமீபத்திய ஆல்பம் ஒன்றின்

சாங்க் புக் வரிகள்

அவளைச் சுருட்டி சுருட்டி 

தின்று கொண்டிருந்தன.

_____________________________________________

அஞ்சிறைத்தும்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக