புதன், 12 ஜூன், 2024

கொட்டு முழக்கங்கள்

 


கொட்டு முழக்கங்கள்

_________________________________________

கல்லாடன்


முட்டுக்கொடுத்தவர்கள் எல்லாம்ஆகா ஓகோ என்கிற ஜனநாயகத்தூண்கள் அல்ல.அந்தக்கட்டைக்கால்களையும்குதிரைபேரம் செய்துஒரு சர்வாதிகார மிருகக்குட்டியைஎப்படி தன்செல்ல பொமரேனியன் ஆக்கிக்கொள்ள முடியும்என்பதில் கரை கண்டவர்கள் இவர்களே.கறையாகிப்போனதுநம் ஜனநாயக எண்ணிக்கை கணக்குத்தான்."வார் ஃபார் பீஸ்"...அமைதி அமர்த்திவைக்க போர் என்பார்கள்.ஏன் அந்த விஷ்ணுவே ஒரு "பெனவெலண்ட் டிக்டேட்ட‌ராக"அவதரித்துஇந்த ஜனநாயக விரோதிகளைவதைத்துவிட்டு செல்லலாகாதா என்றுதினமும் விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்பவர்கள்ஏங்கி ஒரு அறிக்கை விடலாம்."மாமா...பேஷா செஞ்சுட்டாப் போறது..கன்யாகுமரிலே பாத்தேளோ இல்லியோ..இனி இந்த "தேசவிரோதிகள்" தலைகளையெல்லாம்கொய்யாமல் விடாது என் விஷ்ணுச்சக்கரம்."3வது முறையிலிருந்து இன்னும்3000ஆவது வரைக்கும் இது தான்.அரக்கர்கள் எல்லாம் ஓடி ஒளிந்தார்கள்.ஏனென்றால்தேவலோகமே மிகப்பெரும் கொடிய‌அரக்கர்களையும் மிஞ்சிய‌தேவர்களின் கூடாரம் ஆகிப்போனதால்...பாவம்.முதல் தலை துண்டாய்ப் போகப்போவதுஅந்த "மாமாவின்" தலை தான்.அரசாங்க ரேடியோவில் அந்த ரத்த அறிக்கை விரைவில்ஒலி பரப்பப்படும்.யூ ட்யூபுகளில்இனிமேல் இந்த ஏமாற்றுவேலைகள் எல்லாம்நடக்காது... அவர் சோலி முடிஞ்சுதுஇவர் சோலி முடிஞ்சுதுஎன்று"ஃபால்ஸ் ஹோப்" கொடுக்கும்அறிவாளிப்பேச்சாளர்களே!அதோ அந்த‌காஞ்சுபோன புல் கூட‌எழுந்து கொண்டு இனி பற்றிகொள்ளும்என்கிற எதேனும் ஒரு இக்னிஷன் பாய்ண்ட்புலப்படும் வரை இந்த‌புலம்பல் காவியங்களுக்குமுற்றுப்புள்ளி வையுங்கள்."விண்குழலின் புல்லாங்குழல்கள்"விடியல்கள் தருவதில்லை.__________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக