"எண்ணம் புதிது செய்!"
14.06.2024 காலை 5-12
ஈரோடு தமிழன்பன் கவிதை
________________________________
அன்புமிகு ஈரோடு தமிழன்பன் அவர்களே
வானத்தைச்சுருட்டி
கோவணம் கட்டிக்கொண்டு
ஆகாயத்தை மேலே தேடி
கன்னத்தில் போட்டுக்கொள்ளும்
ஆத்மீகவாதி
ஞானத்தை பின் புறம் தேடுவான்
அஞ்ஞான தரிசனம் பெற.
இவர்களுக்கு
கண்முன்னே காட்டும்
மனித கர்ப்பங்கள் எல்லாம்
ஆபாசம் தான்.
எவனோ மூக்குச்சிந்தி போட்டாலும்
போதும்.
அதில்
ஆயிரம் கைகளோடு
அவதாரம் ஜனித்து நிற்கும்.
ஆழ்நிலை சிந்தனைக்குள்
அறிவை கூர் தீட்டும்
தவம் கூட
தீட்டாகிவிடும்
ஒரு அவர்ணத்தான்
தவம் இயற்றினால்.
இவன் தேடிய பிரம்மம் கூட
அம்மணமாய்
அவர்ணமாய்
வந்து நின்ற போது
அதிர்ச்சி அடைந்தான்.
குறுக்கே நூல் இல்லையே.
"சுக்கிலாம்பரதரம்...
சொல்ல வாய் வரவில்லை
தீட்டு கழிக்க
ஜலம் தேடி சொம்பு தேடினான்.
உங்கள் கவிதை
நன்றாய் நம் முதுகுத்தோலை
உரித்து விட்டது.
அடே
மனிதா..
இன்னும் எத்தனை காலத்துக்கு
இப்படி
புறமுதுகுக்காட்டி
இவர்கள் மந்திரங்களுக்குப் பயந்து
ஓடிக்கொண்டிருப்பாய்?
______________________________
கல்லாடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக