சனி, 29 ஜூன், 2024

நம் குரல்கள்

 


ஆஹா!

என் மடி மாணிக்க மேடை.

உன் குரலை கிணு கிணுக்கும்

கை பேசி அதில் தான்

உட்கார்ந்திருக்கிறது.

வீடியோவெல்லாம் வேண்டாம்.

உன் முகத்தை

ஓராயிரம் கற்பனைகளில் செதுக்க‌

இது போதும்.

உன் குரல் போதும்.

சமயங்களில் சட்டைப்பாக்கெட்டில்

வைத்திருப்பேன் அதை.

நம் இதயங்கள் உரசிகொள்ளும்

மின்பொறிகள்

எத்தனை கோடி பிரகாசத்தை

பிரசவிக்கும் என்று

நமக்குத்தானே தெரியும்.

அன்று தான் மனத்தை வலித்தது

என்றோ என்னை உயிரோடு முழுதாக‌

விழுங்கிய 

அந்த அனக்கோண்டா

இன்றும் இப்படி

சீறி சீறி சின்னாபின்னம் 

ஆக்கிக்கொண்டிருக்கிறதே.

கை பேசியை

அலமாரில் வைத்துவிட்டேன்.

அப்போதும் 

அது அமேசானின் அடர்ந்த காடு தான்.

முறுக்கிக்கொண்டு 

நொறுக்கிக்கொண்டு

நம் குரல்கள் கூழாயின போதும்

அவை

பளிங்குக்கல்லறை தானே.


____________________________________________

அஞ்சிறைத்தும்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக