நாளை...
______________________________
கல்லாடன்.
ஓடிக்கொண்டிருக்கும்
குதிரை வாயின் முன் நீட்டிய
குச்சியில் கட்டிய
கேரட் கிழங்கு.
இடைவெளி அப்படியே இருக்கும்.
தூரம் கூடியிருக்கும்.
நாட்கள் கூடியிருக்கும்.
அதே கணிப்பொறிகள்.
அதே எண்ணப்படுதல்கள்.
அதே மக்கள்.
எங்கே
அந்த மக்களின் ஆத்மா?
ஆத்மாவா?
அப்படி ஏதேனும் இருக்கிறதா?
அதே போல் தான் எல்லாம்.
எங்கே
மக்களின் ஜனநாயகம்
என்றெல்லாம் கேட்காதீர்கள்.
நிழல் என்பது
ஒளியின் பின்னேயா?
முன்னேயே?
ஒளிக்கு ஏது
முன்னும் பின்னும்.
எதிர்ப்படுவது தானே
நிழல் ஏற்படுத்தும்.
அறிவும்
சிந்தனையும்
அப்படித்தான்.
ஜனநாயகம் என்கிற
நிழல் வார்ப்புக்கு
மக்கள்
உரு காட்டவேண்டும்.
அறிவும் சிந்தனையுமாய்..
நாளை எனும்
கேரட்
குதிரையின் வாய் படுமா?
நாளை பார்ப்போம்?
_________________________________________
03.06.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக