லட்டு மழை தான் இனி
________________________________
கல்லாடன்.
எல்லாம் பள பளப்பாக
பளிங்குத்தூண்கள் சாட்சியாக
முடிந்து விட்டனவே.
எல்லாம்
மாமூல் மாமூல் மாமூல் தான்.
அதே ஆட்கள்...அதே பெயர்கள்..
அதே துறைகள்.
ஜனநாயகமாவது ஒண்ணாவது
எங்கள் தலைமை பூதம்
கொப்பளிப்பதே
இங்கே கேபினெட்டுகள் எனும்
மந்திரத்து மாங்காய்ச்செடிகள்.
ஏதோ "எண்ணிக்கையில்" மூளியானது என்று
முட்டுக்கொடுப்பவர்கள் கூட
முகத்தில் தாமரைகளோடு
லாலி சுப லாலி பாடிவிட்டார்களே.
இனி லட்டு மழை தான்
வாய்களை பிளந்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஏதோ பாரசீகம்
இல்லாவிட்டால்
ஒரு ஹீப்ரு மொழிப்பெயரில்
ஒரு புயல் வந்து
தூள் கிளப்பிவிடும் என்றார்களே.
நூத்தி நாப்பது கோடி மக்களே!
நாலு வர்ணத்தில் முதல் வர்ணமே
எங்கள் முக வர்ணம்.
மற்ற வர்ணங்கள் எல்லாம்
எங்கள் யாகங்களுக்கு ஆகுதிகள் தான்.
இந்த
எங்கள் கார்ப்பரேட்டின் முன்
எல்லா இமயங்களும் கூட
கூழாங்கற்கள் தான்.
கார்ப்பரேட்டின் பெயரை சொல்லவில்லையா?
இதோ அது தான் இது...
"குதிரை பேரம்"
____________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக