ஜிகினாச்சித்தன் சிலும்பல்கள்
__________________________________________
ஊசியும் உன்னிடம்.
நூலும் உன்னிடம்.
வெறுப்பும் உன்னிடம்.
விருப்பும் உன்னிடம்.
வாழ்க்கை
_____________________________
நூற்றாண்டுகள் தோறும்
பெருக்கியும்
மாளாத குப்பைகள்.
புராணங்கள்
________________________________
இது தான் முதல் அடையாளம்.
அப்புறமும்
கோத்ரம் என்ன என்று
கேட்பது
பச்சை அயோக்கியத்தனம்
இல்லையா?
சிவலிங்கம்.
_________________________________________
நாலுவிதமாய்
மறைத்து
நான் மறை என்றாலும்
அந்த ஆயிரம் கிழிசல்கள்
வழியே
ஆபாசம் தெரிகிறதே.
வேதங்கள்
______________________________________________
நானே படைத்தேன்.
என்னாலும் முடியாது அழிக்க.
மனிதனை நீ
அழிக்கப்பார்த்தால்
பூண்டற்றுப்போவாய்.
உன்னைக்கும்பிட இங்கே
எவருமில்லை.
வர்ணங்கள்.
______________________________________
உன்னை யார் தடுத்தார்கள்.
மந்திரங்களில்
விலங்கு மாட்டிக்கொண்டு
ஏன் இத்தனை கூப்பாடுகள்?
மோட்சம்.
_________________________________
மனிதா
உனக்குள் மின்னல் வெட்டுகிறதே!
அப்புறம்
எதற்கு இந்த தீபங்களின்
அலப்பறைகள்.
ஆராதனை
______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக