திங்கள், 3 ஜூன், 2024

அகர முதல...

 


அகர முதல...

_________________________________________

கல்லாடன்.



எனக்குத் தெரியும் 

கடவுள் என்று எதுவும் இல்லை

என்று.

என் கைப்பிடிக்குள்

ஒரு மூளிப்பிழம்பு இருக்கிறது.

விரல்கள் திறந்தால் 

இல்லை என்று தெரிந்துவிடும்.

கைக்குள் மூடியே

வைத்திருக்கிறேன்.

தெரியும் வரை தெரியாது.

இருக்கும் என்பதே அது இல்லை என்பதை

குறிப்பதே ஆகும்.

இல்லை என்று எதுவும் இல்லை

என்பதும் இருப்பது தானே.

புரியவில்லையா?

எனக்கும் தான் புரியவில்லை.

போய்

உன் வேலையைப்பார்.

இந்த அழுக்கை உருட்டித்திரட்டி

குடமுழுக்கு செய்து

வெறுமைக்குள் முழுக்கு போட்டுவிடாதே.

அறி!

எதை?

எதையாவது அறி!

அந்த திரியில் பற்றவைத்துக்கொள்.

அதன் தும்மலில் 

ஆயிரம் சூரியன்கள்.

சரி.

அறிந்தாயே!

கண்டு பிடித்துவிட்டாயா?

எதையும் கண்டுபிடிக்கவேண்டும் என்று

நான் அறியவில்லை.

அறிவு என்றால் என்ன என்று

அறிவது தானே

அகர முதல!

அதற்கும் முன்பே வந்து  

ஒரு ஆதியும் ஒரு பகவனும் 

உட்கார்ந்து கொள்ளவேண்டுமா?

கடவுளே

கேட்டார் கடவுளிடம்.

சரியான புள்ளியை பிடித்து விட்டாயே!

இது தான்

கற்க கசடு அற என்பது...

கடவுள் கடவுளுக்கு

பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக