திங்கள், 3 ஜூன், 2024

ஈரோடு தமிழன்பன் கவிதைக்கு பின்னூட்டம்.

ஈரோடு தமிழன்பன் கவிதை

_______________________________________________

மழைமொக்கு
உடைகின்ற ஓசைகேட்டு
மனத்தில் துயர் வளர்க்கின்ற
கார்காலக் கவிதைகளின்
கண்ணீரை யார் மாற்றுவார்?
காத்திருந்து
தூக்கத்தின் கதவுதட்டிய
கனவுகளேன் பின்வாங்கித்
திரும்பவேண்டும்? புரியாமல்
குழம்பித் தவிக்கிறது இரவு
ஓரலையும்
ஓரலையும் கைகோக்கும்
காதல் விளையாட்டைக்
கைதட்டி வரவேற்கும்் ஓரலையை
யார்கண்டார் நதிவெளியில்?
உதடுகளின்
புன்னகைக்
குடியிருப்பில் வாழ இடம்கேட்டுத்
தொட்டில் குழந்தைக்குத்
தூதுவிடும் பூஎப்பூவாம்?
பத்து வரத்
தாமதித்தால் என்னசெய்யும்
ஒன்பது?
இடப்பக்கம் கைநீட்டி
எட்டின் கை பற்றிடுமா?
வேர்கள்
மண்ணோடு பேசும்
கதையின்னும் முடியவில்லை
பூவோடு பேச வண்டுக்கு
யார்வைத்தார் வெற்றிலைபாக்கு?
வெளிச்சம்
என்ற சொல் பிறந்தது மொழி
சூரியனில் விழித்திருந்த பொழுதிலா?
நிலாநெஞ்சில் பாய்போட்டுப்
படுத்திருந்த பொழுதிலா?
மனிதன்
சொன்னபடி கேட்கும்
நாய்கள் ஒருநாள ்மனிதனைப்
பார்த்துக் கேட்டன
யார்சொன்னபடிதான் நீ கேட்பாய்?
யார் சொன்னடிதான் நீ கேட்பாய்?

02-06-2024மாலைமணி05.


E Paramasivan Paramasivan
உங்கள்
கவிதை வேர்பிடிக்கிறது.
அதன் அடிமுனை
நெருப்புக்குழம்பில்.
அதனால் தான்
அதன் தட்டாம்பூச்சிக்
கண்ணாடிசிறகுகள்
எல்லாம்
சூடேறிய கனவுச்சிறகுகள்.
சொற்களின்
ஒவ்வொரு
மைல் கல்லிலும்
ஒரு சிலுவை
அல்லது
ஒரு தூக்கு மரம்.
உங்கள் கவிதை
"சொல்லியலின்
ஒரு பரிணாமம்"
மரணம் ஜனிப்பதும்
ஜனனம் மரிப்பதுமாய்
ஒத்தையா ரெட்டையா
விளையாட்டு.
உங்கள்
சொல் விஞ்ஞானம்
சொற்களுக்கிடையேயும்
புல்லரிக்க வைக்கிறது.
கவிஞர் அவர்களே
உங்கள் பேனா வருடலில்
எங்கள்
நுரையீரல்பூங்கொத்துகள்.
-------------------------------------------
கல்லாடன்.
  • விருப்பம்
  • பதிலளிக்கவும்
2
படைப்பாளர்
Erode Tamilanban

E Paramasivan Paramasivan நுட்பப்பார்வை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக