அரசியல் "கலாய் "டோஸ்கோப்
=====================================================ருத்ரா
(கலாய்க்கப்பட்ட அரசியல் கலைடோஸ்கோப்.)
இந்தப்பக்கம்.
==============
திமுக
"தமிழ்நாடு"களவு போகலாம்.
"த்ரமிள தேசம்" இறக்குமதி ஆகலாம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை! தமிழர்களே!
காங்கிரஸ்
மதவாதத்தின் மார்பைப் பிளக்க
நம் கைக்கு கிடைத்த "கை"
கதாயுதம் ஆகுமா?
மதிமுக
நரம்பு புடைக்கிறது.
அந்த கருப்புத்துண்டே
இவருக்கு நெருப்புத்துண்டு.
விசிக
சனாதனம் வேதாளம்
சமூக நீதியே இந்த
விக்கிரமாதித்தனின் வீரவாள்.
இரண்டு கம்யூனிஸ்டுகள்.
வியர்வையின் உழைப்புக்கடலின்
இவர்கள் கிழக்குகளும் மாறுவதில்லை.
விடியல்களும் மாறுவதில்லை.
மற்றவை
மதச்சார்புடன்
ஒரு பூதம் கிளம்புவதை
அடித்து நொறுக்கத் தயார்.
------------------------------------------------------------------------------------------------
அந்தப்பக்கம்
==============
அதிமுக.
ஹையா!
பார்லிமெண்டு பொம்மை வைத்து
விளையாடலாம் வாருங்கள்.
மோடி
லேடியின் ஆன்மா எங்கள்
கனவில் வந்து சொன்னது
மோடியே டாடி என்று.
குட்கா மலை.
மீண்டும் வேண்டும் மோடி வேண்டும்
குட்கா மலைக்குள் ஒளிந்து கொள்ள
மீண்டும் மீண்டும் மோடி வேண்டும்.
தேமுதிக
ஓட்டு வங்கிக்குள் ஒரு நோட்டு வங்கி.
கரைதட்டிப்போனது
இந்த கேப்டன் கப்பல்.
பாமக
மாமரம் தூக்கு போட்டுக்கொண்டது.
மாங்கனியுடன் ஒரு எட்டிக்காய்
பண்டமாற்று செய்துகொண்டதால்.
தமாக
வாசன் என்றால் வாசம் அல்லவா?
வாசம் இழந்த
காகிதப்பூவா இந்த காங்கிரஸ் பூ?
டாக்டர் கிருஷ்ணசாமி
பட்டியல் வேண்டாம் சரி.
தேவர்கள்களாகிய எங்களுக்கு
இந்திரர்களா நீங்கள்?
பல்லை நற நறத்து
புன்னகை பூத்தது சனாதனம்?
ஏசி சண்முகம்.
பெயரை எப்படி
வைத்துக்கொண்டாலும் இவர்
ஓசி சண்முகம் தான்.
மற்றவை
அம்மா என்கிறார்கள்.
ஆட்டுக்குட்டி என்கிறார்கள்.
கறி விருந்து நிச்சயம்!
------------------------------------------------------------------------------ருத்ரா இ பரமசிவன்.
=====================================================ருத்ரா
(கலாய்க்கப்பட்ட அரசியல் கலைடோஸ்கோப்.)
இந்தப்பக்கம்.
==============
திமுக
"தமிழ்நாடு"களவு போகலாம்.
"த்ரமிள தேசம்" இறக்குமதி ஆகலாம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை! தமிழர்களே!
காங்கிரஸ்
மதவாதத்தின் மார்பைப் பிளக்க
நம் கைக்கு கிடைத்த "கை"
கதாயுதம் ஆகுமா?
மதிமுக
நரம்பு புடைக்கிறது.
அந்த கருப்புத்துண்டே
இவருக்கு நெருப்புத்துண்டு.
விசிக
சனாதனம் வேதாளம்
சமூக நீதியே இந்த
விக்கிரமாதித்தனின் வீரவாள்.
இரண்டு கம்யூனிஸ்டுகள்.
வியர்வையின் உழைப்புக்கடலின்
இவர்கள் கிழக்குகளும் மாறுவதில்லை.
விடியல்களும் மாறுவதில்லை.
மற்றவை
மதச்சார்புடன்
ஒரு பூதம் கிளம்புவதை
அடித்து நொறுக்கத் தயார்.
------------------------------------------------------------------------------------------------
அந்தப்பக்கம்
==============
அதிமுக.
ஹையா!
பார்லிமெண்டு பொம்மை வைத்து
விளையாடலாம் வாருங்கள்.
மோடி
லேடியின் ஆன்மா எங்கள்
கனவில் வந்து சொன்னது
மோடியே டாடி என்று.
குட்கா மலை.
மீண்டும் வேண்டும் மோடி வேண்டும்
குட்கா மலைக்குள் ஒளிந்து கொள்ள
மீண்டும் மீண்டும் மோடி வேண்டும்.
தேமுதிக
ஓட்டு வங்கிக்குள் ஒரு நோட்டு வங்கி.
கரைதட்டிப்போனது
இந்த கேப்டன் கப்பல்.
பாமக
மாமரம் தூக்கு போட்டுக்கொண்டது.
மாங்கனியுடன் ஒரு எட்டிக்காய்
பண்டமாற்று செய்துகொண்டதால்.
தமாக
வாசன் என்றால் வாசம் அல்லவா?
வாசம் இழந்த
காகிதப்பூவா இந்த காங்கிரஸ் பூ?
டாக்டர் கிருஷ்ணசாமி
பட்டியல் வேண்டாம் சரி.
தேவர்கள்களாகிய எங்களுக்கு
இந்திரர்களா நீங்கள்?
பல்லை நற நறத்து
புன்னகை பூத்தது சனாதனம்?
ஏசி சண்முகம்.
பெயரை எப்படி
வைத்துக்கொண்டாலும் இவர்
ஓசி சண்முகம் தான்.
மற்றவை
அம்மா என்கிறார்கள்.
ஆட்டுக்குட்டி என்கிறார்கள்.
கறி விருந்து நிச்சயம்!
------------------------------------------------------------------------------ருத்ரா இ பரமசிவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக