ஞாயிறு, 3 மார்ச், 2019

டிஜிடல் குப்பைகளாய்....


டிஜிடல் குப்பைகளாய்....
============================================ருத்ரா


வெறித்து வெறித்துப்பார்க்கிறேன்
அந்த குப்பைத்தொட்டியை.
அது பிதுங்கி வழிகிறது.
நசுங்கிய அட்டை டப்பா
அப்போது தான் வீசப்பட்ட‌
ஆட்டுக்குடல் மிச்சங்கள்.
என்னவென்றே தெரியாமல் தெரியும்
கசா முசா பொருள்கள்.
துணிகளின் கூளங்கள்.

ஆமாம்..
இதை என்ன செய்வது?
இது தான் நம் தோள்களில்
சிந்துபாத் கிழவன்களாய் இறுக்கும்
சாத்திரங்கள் ஆத்திரங்கள்
எல்லாம்..
தெளிவற்ற சிந்தனைகள்.
உருவாகாத சித்தாந்தங்கள்.
கடவுள் என்றால் என்ன என்று
கடவுளே கூச்சல்போடும்
ஸ்லோகங்கள்.
சொந்தமொழியில் கடவுள் என்று
சொன்னால் கூட‌
அதில் நாத்திக வாடை வீசுவதாய்
முகஞ்சுழிக்கும்
தமிழ்ச்சனாதன அழுகல் கருத்துகள்..
இவையும் கூட எங்கோ கடலில்
எறியப்பட வேண்டியப்பட வேண்டிய‌
குப்பைகளாய்...

நம்மை மூடிவிடக்குவிக்கப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன.
நசுங்கிய நிலையிலும்
அதோ ஒரு குரல்...
"அண்ணே..பேரம் படிந்து விடும்.
பத்திரிகைகளுக்கு சொல்லிவிடுங்கள்"

அந்த தொட்டியில்
தேர்தல் கணிபொறிகளும்...
ட்ஜிடல் குப்பைகளாய்....

===================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக