வெள்ளி, 1 மார்ச், 2019

வருக வருக அபினந்தன் அவர்களே!

வருக வருக அபினந்தன் அவர்களே!
===========================================ருத்ரா

பேசாமல் பனிமூட்டையின்
பொதியாய்க் கிடந்த‌
இந்த இமயமலையே
கொஞ்சம் நகர்ந்து அசைந்து
வாகா வுக்கு வந்து
உன்னை வாழ்த்துகிறது!
ஓ எங்கள் அருந்தவப்புதல்வனே!
விமானம் சிதைந்தும்
நம் மானம் சிதையாமல்
எதிரிகளிடம் உன் உறுதி காட்டினாய்.
நம் ரகசியங்களை
நீ தின்று ஒளித்து
வென்று காட்டினாய்.
என்னவோ இவர்கள்
வாரிசு வாரிசு என்று
மேடைக்கு மேடை
கூச்சல் இடுகிறார்களே!
மூன்று தலைமுறைகளாய்
நீ வீரம் சுடர்ந்து
நம் அன்னை மண்ணை
அடைகாத்து நிற்கிறாயே!
பாரதம் எத்தனையோ மொழிகளை
நாவில் கூடு கட்டி
வாழ்ந்தாலும்
புறம் காட்டாத நம் வீரத்தின்
புறநானூறு
இந்த உலகுக்கே சுடர் காட்டும்.
அந்த ஒப்பற்ற நம் சுடர் ஒன்றை
ஏந்தி வருகிறாய்
அருமைச்செல்வா!
வாழி நீ! வாழி நீ!
நம் முப்படை வீரர்களின்
உள்ளங்கள் எல்லாம்
தினம் தினம் நம் மண்ணில் பூக்கும்
சூரியன்கள் ஆகும்.
அதன் வெற்றி ஒளியே
நமக்கு
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

==================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக