வியாழன், 21 மார்ச், 2019

ருத்ராவின் கவிதைகள் (2)

ருத்ராவின் கவிதைகள் (2)
‍‍‍‍‍‍‍_________________________________



வண்ணங்களின் விழா
================================================ருத்ரா



தூரிகைகள் கூட்டம் கூட்டமாய்
விளையாடின.
ஆட்டம் ஆடின.இனிய பாடல்கள் பாடின.
குபீரென்று
தோன்றிய வண்ணப்பிழம்புகளையெல்லாம்
ஒன்றுக்கொன்று பீய்ச்சிக்கொண்டன.
பட்டாம்பூச்சி ரெக்கைகளை
வித விதமாய்
தங்கள் குறுகிய மனஇடுக்குகளில்
இன்று செருகிக்கொண்டன.
இன்று சூரியன் கூட‌
குளிர்வண்ணப்பச்சையை பொழிந்தான்.
கோபத்தைக்காட்டி
முகங்களில்
கோடுகளின் பள்ளத்தாக்குகளில்
கொடூரத்தைக் காட்டும்
இறுக்கமெல்லாம்
இன்று நேராகி விட்டது.
பிரகாசமான ரோஜாக்களாய்
எங்கும் எதிலும்
எந்த சந்து முனையிலும்
அவை தான் எல்ல நிற‌ங்களும்
வடிகட்டிப் பெய்த அமுத ஊற்றாக‌
ஆயிற்று.
மிகப்பிரம்மாண்டமான ஆண்டவன்
அந்த பீச்சாங்குழல் துளைவழியே
அன்பின்..நேசத்தின்
கீற்றுகளாய்
பாசம் காட்டி விளையாடும்
வண்ணப்பிசிறுகளாய்
வழி நெடுக இறைந்து கிடக்கிறான்.
என் மதம் உன் மதம்
என்று குறுக்குச்சுவர்கள்
வண்ணக்குழம்பின் எண்ணத்துளிகளை
ஏந்தும் தூரிகைகளால்
தூள் தூள் ஆகின.

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக