ஞாயிறு, 31 மார்ச், 2019

கரும்பின் எந்திரம் பிழியல் அன்ன

சங்கநடைச்செய்யுட்கவிதை
============================.
(11/ 07/2016 ல் எழுதியது)


கரும்பின் எந்திரம் பிழியல் அன்ன
=====================================ருத்ரா இ பரமசிவன்.

கரும்பின் எந்திரம் பிழியல் அன்ன‌
கனவு இடை கனவு மேல் கனவு கீழ்
படுமனம் இரட்ட கனைகுரல் கேட்டோய்
சுரும்பின் பொறிசிறை ஆர்த்தெழு செய்யும்
மணிஒலியுள்ளும் ஒலிக்கும் சிரிக்கும்
ஒள் எயிற்று பயிர்ப்பின் புதைக்கும்
ஓவா நோவு உள் கண்டு வெதும்பி
நனைந்தலைக் கானம் நசைஇ செல்ல‌
ஆழ்சுரம் சுழிப்ப அருநிழல் பூத்த‌
யாறு கடாம் நிமிர் தோள் வெற்ப.
நெகிழ் வளை நிலம் சொரியக்கண்டு
குவளை விழியும் வற்றா சுனையாய்
கண்ணீர் நிழல ஆங்கே உன் கொடுநகை
கொல்லும் என்னே. இஃ து காண் தீயின்
நோவு எனை எரித்து எரித்து உயிர்க்கும்.

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக