செவ்வாய், 12 மார்ச், 2019

உயிர்க்கோடு



உயிர்க்கோடு
==========================================ருத்ரா


உள்ளங்கை பீடபூமியில்
சுக்கிரமேடு
சூரிய மேடு.
ஆயுட்கோடும் அருகே
இதயக்கோடும்
இருக்கிறதாமே.
உற்று உற்றுப்பார்த்தேன்.
எங்கே அந்த காதல் கோடு?
அன்றொரு நாள்
அவள்
தொடாமல் தொட்டு
வருடியதில்
இந்த கைக்குள்
ஒரு மின்னல் பாய்ச்சினாளே!
எங்கே அந்த..என்
உயிர்க்கோடு?

=================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக