வெள்ளி, 8 மார்ச், 2019

தேர்தல் குறும்பாக்கள்

தேர்தல் குறும்பாக்கள்
=============================================ருத்ரா
(கார்ட்டூன் கவிதைகள்)



மோடிஜி

வலுவான பொய்களின் ரோபோட்.
ப்ரோகிராம் செய்தது
சங்க் பரிவார்.


அருண்ஜேட்லி

இவரது பொருளாதார புத்தகம்
தடிமனானது.
வெறும் வெள்ளைப்பக்கங்களால்.


அமித்ஷா

இரும்புக்கரம் கொண்டு
ஊர் ஊராய் போய்
காக்காய் விரட்டுகிறார்.


தமிழிசை

இவர் குரல் தமிழ் தான்.
ஆனால் ஓசை எல்லாம்
"காவி"யம்.


எச்.ராஜா

பல் தேவையில்லை கடிப்பதற்கு.
சொல்லே போதும்.
எதிர்கட்சிகள் படுகாயம்.


பொன்னார்.

இந்த பெரிய மனிதர் வாக்கியங்கள்
சின்னப்பிள்ளைகளுக்காவது
புரியுமா?

கமல்

"மய்யம்" மட்டுமே
தமிழ்ப்
புரட்சி ஆகுமா?


ரஜனி

குலுங்கினால்
சத்தம் வரும் தீப்பெட்டி.
குச்சி தான் ஒன்றையும் காணோம்.


டிடிவி

சிரித்துக்கொண்டே
வாயாலேயே அளக்கிறார்
நாப்பது தொகுதிகளையும்.


ஸ்டாலின்

கல்லு கல்லாய் பொறுக்கி
ஜாடியில் போடுகிறார்.
நம்பிக்கையே ஆயுதம்.


உதயநிதி.

பின்பகுதி பெயர்
தாத்தாவுடைய தென்றால் மட்டும்
தாத்தா ஆகிவிட முடியுமா?

ராகுல்

ஜனநாயகத்தைக்காக்க
உயரே எழுந்து விட்ட ஒரு
மிராஜ் 2019.

 பாமக

உறையிலிருந்து வீர வாள்
வரும் என்று பார்த்தால்
காலியாகி இருந்தது உறை.

தேமுதிக.

கூடாரம் முழுக்க
மனைவி மைத்துனன் மகன் மட்டுமே!
கேப்டன் எங்கே?

அதிமுக

பாஜக என்று இதற்கு
தமிழ் மக்கள்
அர்த்தம் சொல்கிறார்கள்.

தேர்தல் ஆணையம்

தேதிக்கு அவசரமே இல்லை.
நோட்டு வங்கிகளில்  ஓட்டு வங்கிகள்
விழுந்து முடிக்கட்டும்.

தமிழ்

அது ஒரு
"இந்து "மகாசமுத்திரத்தில்
மூழ்கிக்கிடக்கிறது


===============================================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக