சனி, 16 மார்ச், 2019

அன்பின் சீனா

Image result for அன்பின் சீனா
நன்றி .."கூகிள் இமேஜஸ்"

அன்பின் சீனா
================================================ருத்ரா

"அன்புடன்" குழுமத்தின்
இதயமாக துடித்து நின்றவர்
தன் புகைப்படத்தோடு
ஒரு பூமாலையைச்
சூட்டிக்கொண்டாரே!
அந்த பூக்களின் அழுகை
இதழ் இதழாய் அவரை
அந்த படத்துக்குள்ளும்
நுழைந்து நனைத்திருக்கும்..

அவரின் அந்த சிரிப்பு
குறுந்தொகையா?
நெடுந்தொகையா?
அது நம் இணையங்களின்
சங்கத்தமிழ்!

நான் 2000ங்களில்
"அன்புடன்" ல் எழுதத்துவங்கியபோது
என் விசைப்பலகையில்
ஒவ்வொரு எழுத்திலும்
அவர் காட்டும் அந்த நட்பின்
நாகரிகச்சுவடுகள்
முனைந்து நின்று ஊக்கம் சேர்க்கும்.
தமிழின் சிந்துவெளி அகழ்வை
நம் எழுத்துக்களில் பொதிய
வைத்துக்கொண்டிருந்தவர்.
இப்போது கண்ணீர்
சிந்தும் வெளிகளை
நம்மிடையே பெருக வைத்து விட்டார்.

அவர் மின்னூட்டம்
எழுத்துக்கள் கொண்டு கோர்த்தது அல்ல‌.
மனத்தின் இலக்கிய மகிழ்ச்சிக்கு
செறிவூட்டும் "வைட்டமின்கள்"
கொண்டு படைத்தவை ஆகும்.
என் கவிதைகள்
முற்றுப்புள்ளியைக்கண்டதில்லை.
அவர் தொடர வைத்துக்கொண்டே
இருப்பார்.
இயற்கை அவரை மறைத்திருக்கிறது.
அவ்வளவே!
"அன்பின்  சீனா.." எனும்
அந்த வரிகள்
சலவைக்கல் கொண்டு கட்டப்பட்ட
ஒரு நினைவாலயம் போல்
நின்றுகொண்டிருக்கிறது.
பளிச்சென்று அழுக்குகள் அகன்ற
சிந்தனைக் கருவூலமாக!

===============================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக