வியாழன், 28 மார்ச், 2019

சிந்திக்கத்தான் வேண்டும்.

சிந்திக்கத்தான் வேண்டும்.
‍‍‍‍‍‍‍‍‍=========================================ருத்ரா
‍‍‍‍‍‍

தேர்தல் என்பது
கணிப்பொறிக்கு
விரல் தொட்டு
பொட்டு வைப்பது
அல்ல.

கோடிப்பொட்டுகள்
வைத்தும்
மங்கலத் தோரணங்கள்
ஆடவில்லையே
நம் ஜனநாயகத்துக்கு .

பட்டினி..
பிணி..
சுரண்டல்..
பாலியல்
வன் கொடுமை...
வக்கிரங்கள் ...
கொலை
கொள்ளைகள்...

வறுமையும்
அறியாமையுமே
நம்மைப்பியத்து
தின்னும்
அந்தப்பேய்கள்.

பட்டொளி
வீசிய
சுதந்திரத்தில்
சமுதாயம்
கந்தல்
ஆனதே.

மூவர்ணத்தை
மறைக்கும்
நான்கு வர்ணங்களில்
நம் தேசியக்கொடி
களவு போனது.

அவர்கள்
நாற்காலிக்கு
உங்கள் எலும்புகள்
முறிக்கப்பட‌
வேண்டுமா?

சாதிகள் இங்கு
பீதிகள்
கிளப்புவதற்கு
மட்டுமே?

தினம் தினம்
செத்துப்பிழைக்கும்
நம் வாழ்வில்
கடவுள் என்னும்
விளையாட்டுப்
பொம்மைகளால்
என்ன பயன்?

மதச்சடங்குகள்
உங்களை
ஒரு பாதாளத்துள்
வீழ்த்தும் கிடங்குகள்.


நிலமும் நீரும்
மலையும் மண்ணும்
கம்பெனி லேபிள்களில்
காணாமல் போவதே
இங்கு பொருளாதாரம்.


சிந்திக்கவேண்டும்
அன்பு மக்களே!
நீங்கள் ஆழ்ந்து
சிந்திக்கத்தான்
வேண்டும்.

========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக