வெள்ளி, 29 மார்ச், 2019

சூப்பர் டீலக்ஸ் விஜயசேதுபதி

சூப்பர் டீலக்ஸ் விஜயசேதுபதி
==========================================ருத்ரா


பொம்பளயுமாக இல்லாமல்
ஆம்பளையுமாக இல்லாமல்
இரண்டு கவர்ச்சிகளையும்
ஒரே பாத்திரத்தில்
ஊற்றிக்கொடுத்தால்
என்ன என்று பிரமன்
செய்த காக்டெயில் தான்
திருங்கைகள் திருநம்பிகள்.
முதல் போணியை
சிவனிடமே காட்டினார் பிரம்மா.
அர்த்தநாரீஸ்வர் ஆன கடவுளோ
அப்போது தான் புரிந்து கொண்டார்
கடவுளின்
அர்த்தமும் அப்படித்தான் என்று.
அர்த்தமில்லாததை
அர்த்தம் என்று வந்து ஆலிங்கனம்
செய்து கொள்ளுவதும்
அர்த்தத்தை
அர்த்தங்கெட்டதனங்கள்
அட்ச்சு தூக்குவதும் தான்
இந்த சமுதாயப் பிண்டத்தை
இயக்கிக்கொண்டிருக்கும்
இறைவம் என்பது மிகமிக‌
அலப்பறையான தீம்.
நம் தூக்கங்கள் பறிபோகும்.
குவாட்டர் கட்டிங் போடுபவர்களும்
அழுவார்..சிரிப்பார்
மற்றவர்களும்
கொதிப்பார்கள் குளிர்வார்கள்.

ஆரண்யகாண்டத்தையே
ரண காண்டங்களின்
தோரணம் ஆக்கியவர் இயக்குநர்.
இதில்
நம் போலியான சோளத்தட்டை
சமுதாயத்தை
கந்தல் ஆக்கியிருக்கிறார்.
இதற்கும் ஒரு வீரம் வேண்டும்.
அதில் ஒரு சாரம் வேண்டும்.
இனி நாம் கொடுக்கும் விருதை
"கோஹினூர் வைரம்" என்று
பெயர் மாற்றி விடலாம்.
அது முழுவதும் இயக்குனர்
தியாகராஜன் குமார ராஜாவுக்கே
போக வைக்கிறது இப்படம்.
விஜய சேதுபதி
திருநங்கைக்குள் இருக்கும் சமுதாய
எரிமலைப்பிழம்பை அநாயசமாய்
எலுமிச்சம் பழ ஜூசாக்கி
ரசிகர்களுக்கு கொடுக்கிறார்.
குடிக்கும்போதே
ரசிகர்கள்
காதுகளிலும் கண்களிலும்
புகை கக்கியாக வேண்டும்.
நடிப்பின் உட்கருவுக்குள்
ஆயிரம் அணுவுலைகளை செருகி வைத்து
திரைப்பட இலக்கியத்தின்
பீடபூமிகளிலும் மலைகளிலும்
அந்த சர்ஜிகல் அட்டாக்கை
துல்லியப்படுத்தி தூள் கிளப்புகிறார்.
அவர் அகன்றகண்களும்
அலையாக ஆர்ப்பரிக்கும்
பெண் கூந்தல் "விக்"கும்
ஒரு வினோத பாத்திரப்படைப்பு.
குடுகுடுப்பைக்காரனின்
ஒட்டுத்துணிகள் போல் இருந்தாலும்
கதையை அக்கு அக்காக ஆகி
பிரித்து மேய்ந்து
எண்ணெய் போட்டு
ஓட்ட வேண்டிய எந்திரம்
இந்த மக்களின் கதை
என்று
"நச்"என்று
மண்டையில் அடித்திருக்கிறார்
இயக்குநர்.
ஓட்டு போடும் எந்திரமே
எலும்பு வேறு சதை வேறு
நரம்பு வேறு ரத்தம் வேறு
என்கிறவகையில் கோணா மாணாவாய்
கோளாறுகளில் கிடக்கும் போது
அதன் மூளையும் இதயமும்
இனிமேல் தான் அதில் வைக்கவேண்டும்
என்று
நுட்பமாய் ஒரு தீம் இழைந்திருக்கிறது
இந்த சூப்பர் டீலக்ஸில்.

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக