சனி, 23 மார்ச், 2019

உறங்குவது போலும் சாக்காடு




உறங்குவது போலும் சாக்காடு
====================================================ருத்ரா

உறங்குவது போலும் சாக்காடு
என்றான் வள்ளுவன்.
தினம் தினம் அந்த
மரண நாடகத்தில் பங்கேற்று விட்டு
திரை விலக்கி ..திரைமூடி ..
திரை விலக்கி
ஏதோ மேக  மண்டலங்களையெல்லாம்
அளைந்து விட்டுத்தான் வந்து
பற்பசையை பிதுக்கி
பல் விளக்குகிறோம்.
மரணம் பாதி ஜனனம் பாதி
வாழும்  இந்த வாழ்க்கையின்
இந்த ஒத்திகை
ஒரு இருட்டுக்கடலில்
விடப்படும் வெளிச்சப்பிரளயத்தின்
பிரம்மாண்ட கப்பல்.
சிக்மண்ட் பிராய்டு
அந்த மாய மண்டலத்தின்
தொப்பூள்கொடியைப்
பிடித்து ஊஞ்சலாடி விட்டு
வந்து சொல்லிவிட்டான்.
நம் முரண்பாடுகள்  அரங்கேறும்
அடித்தளத்தின் அடித்தளம் இது
என்று சொல்லிவிட்டான்.
நம் சைத்தான்களும் கடவுள்களும்
அம்பு விட்டு விளையாடும்
இந்த திடலில்
ஓ மனிதா!
நீ ஒரு பகவத் கீதை சொல்லு
இவர்களுக்கு.
கடவுள் எனும் "பார்டிகிள் -ஆன்டி பார்ட்டிகிளுக்கு"
"செர்ன்" எனும் அணுஉலைக்கூடம்
விஸ்வரூபம் காட்டுவது
உன் சிந்தனையின் கதிர்வீச்சுக்களம்
என்று.
அது உன் கனவுகளின்
கோகூன் எனும் புழுக்கூட்டு மண்டலம் தான்
என்று.
கண்விழிக்கும் போது
உன் விடியல்களின் வண்ணத்துப்பூச்சிகள்
உன் கையில்
என்று சொல்லு.

===============================================================
காலை. 07.22. / 22.03.2019.."வெள்ளிக்கிழமை "




2 கருத்துகள்:

நான் சொன்னது…

//நம் சைத்தான்களும் கடவுள்களும்
அம்பு விட்டு விளையாடும்
இந்த திடலில்// -மிகவும் ரசித்தேன்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

தங்கள் ரசிப்புக்கு மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா


கருத்துரையிடுக